சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

தொலைதூர - சட்ட திட்டத்தின் வெற்றி கதைகள் குறித்த முதல் இ-பதிப்பை, "தொலைதூரத்தில் உள்ளவர்களை சென்றடைதல் - பயனாளிகளின் குரல்கள்" என்ற தலைப்பில் நீதித்துறை வெளியிட்டுள்ளது

Posted On: 23 SEP 2020 10:15AM by PIB Chennai

தொலை தூர சட்ட திட்டத்தின் பயணத்தை நினைவுகூரும் வகையில், நீதித்துறை தனது முதல் கையேட்டைதொலைதூர சட்டம்  - தொலைதூரத்தில் உள்ளவர்களை சென்றடைதல்  - பயனாளிகளின் குரல்கள்என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இது பயனாளிகளின் உண்மையான  வாழ்க்கைக் கதைகள்  மற்றும் தொலை தூர சட்ட திட்டத்தின் மூலம் தங்களின் அன்றாட பிரச்னைகளை தீர்க்க அவர்கள் பெற்ற உதவிகள் ஆகியவற்றின் தொகுப்புதற்போது 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 260 மாவட்டங்களின் 29860  வழக்குகளை இது  உள்ளடக்கியுள்ளதுதொலைதூர பகுதிகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தொலை-தூர சட்ட திட்டம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

 

 சட்ட  உதவியை பெறுவதில் கிராமத்தினரை ஊக்குவிப்பதில், சட்டஉதவி  தன்னார்வலர்கள்  மற்றும் கிராம அளவிலான தொழில் முனைவோரின் பங்கை இந்த புத்தகம் எடுத்து கூறுகிறதுபிரச்னைகளை தீர்க்கும் மாற்று வழிகள் மூலம், சாதாரண மக்களின் அச்சத்தை இது நீக்கியுள்ளது

அநீதிக்கு எதிராக பேராடுதல், சொத்து பிரச்னைக்கு தீர்வு, கொவிட் நெருக்கடியில் இருந்து நிவாரணம், தகவல்கள் மூலம் மேம்பாடு, நடைமுறை சிக்கல்களை கடந்து செல்லுதல், குடும்ப வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கை  என  6 பிரிவுகளில்  பலரது அனுபவ கதைகள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்த -புத்தகத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Click here to see “Tele-Law - Reaching the Unreached, Voices of the beneficiaries booklet

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1658004 –

-----(Release ID: 1658041) Visitor Counter : 41