சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாட்டில் தொடர்ந்து 3வது நாளாக 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்

प्रविष्टि तिथि: 21 SEP 2020 11:33AM by PIB Chennai

குணமடைந்தோர் வீதம் 80%-க்கும் மேல்  என்ற இலக்கை இந்தியா கடந்துவிட்டது.

குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதோடு, தொடர்ந்து 3வது நாளாக குணமடைந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 93,356 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

1covid.jpg

12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குணமடைந்தோர் வீதம் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது.

2covid.jpg

புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 79% பேர் 10 மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை இன்று 44 லட்சத்தை (43,96,399)நெருங்கிவிட்டது. குணமடைந்தோர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்த எண்ணிக்கை உலகளவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் 19%.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1657163

********


(रिलीज़ आईडी: 1657190) आगंतुक पटल : 229
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam