பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கான நிரந்தர ஆணையத்துக்கு அனுமதி அளிப்பதற்கான தேர்வு குழு கூட்டம் தொடங்கியது
प्रविष्टि तिथि:
19 SEP 2020 11:04AM by PIB Chennai
நிரந்தர ஆணையத்துக்காக பெண் ராணுவ அதிகாரிகளை தேர்வு செய்ய அனுமதி வழங்குவதற்கு அமைக்கப்பட்ட சிறப்பு எண் 5 தேர்வு குழுவின் கூட்டம் 2020 செப்டம்பர் 14 அன்று ராணுவ தலைமையகத்தில் தொடங்கியது.
மூத்த ஜெனரல் அதிகாரியின் தலைமையில் அமைந்த இந்தக் குழு, பிரிகேடியர் நிலையில் உள்ள ஒரு பெண் அதிகாரியையும் உள்ளடக்கியது ஆகும்.
செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்காக, இந்தக் குழுவின் கூட்டத்தில் பெண் அதிகாரிகள் பார்வையாளர்களாக அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதில் தேர்வு செய்யப்படும் பெண் அதிகாரிகளுக்கு குறைந்தபட்ச மருத்துவ தகுதியின் அடிப்படையில் நிரந்தர ஆணையம் வழங்கப்படும்.
(रिलीज़ आईडी: 1656611)
आगंतुक पटल : 189