பிரதமர் அலுவலகம்
இலங்கை அதிபர் மற்றும் பிரதமருடன் பிரதமர் தொலைபேசி உரையாடல்
प्रविष्टि तिथि:
17 SEP 2020 11:19PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் பிறந்த நாளான இன்று இலங்கை அதிபர் மேன்மைமிகு திரு கோத்தபய ராஜபக்ச மற்றும் இலங்கை பிரதமர் மேன்மைமிகு திரு மகிந்த ராஜபக்ச ஆகியோர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
அண்டை நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களது அவா மற்றும் உறுதியை இரு இலங்கை தலைவர்களும் வெளிப்படுத்தினர். கொவிட் பெருந்தொற்றுக்கு எதிரான ஒன்றிணைந்த போர் உட்பட தொடர் இருதரப்பு ஒத்துழைப்புக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தங்களது மனமார்ந்த வாழ்த்துகளுக்காக இரு தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர், இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையை சார்ந்து இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்த அவர்களுடன் இணைந்து பணிபுரிவதற்கு தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
******************
(रिलीज़ आईडी: 1656009)
आगंतुक पटल : 267
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam