பிரதமர் அலுவலகம்

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக சொந்த ஊர்களுக்குத் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை அதிகப்படுத்துவதற்காக பிரதம மந்திரி நரேந்திர மோடி 20 ஜுன் 2020 அன்று கரீப் கல்யாண் வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்

இந்தத் திட்டமானது நீடித்திருக்கக் கூடிய ஊரக உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் மற்றும் கிராமங்களில் இணைய வசதி உள்ளிட்ட நவீன வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்: பிரதம மந்திரி

அவரவர்களின் வீட்டிற்கு அருகிலேயே வேலை செய்ய உதவும் வகையில் ஊரகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் திறன் மதிப்பீட்டு வரைபடம் உருவாக்கப்படும்: பிரதம மந்திரி

6 மாநிலங்களின் 116 மாவட்டங்களில் ரூ.50,000 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் தீவிர இயக்க மாதிரி அடிப்படையில் 125 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும்

Posted On: 20 JUN 2020 2:06PM by PIB Chennai

பிரதம மந்திரி நரேந்திர மோடி மிகப்பெரிய வேலைவாய்ப்பு தரும் ஊரகப் பொது வேலைகளுக்கான கரீப் கல்யாண் வேலைவாய்ப்புத் திட்டம் என்ற பெயரிலான பிரச்சார முகாமை இன்று (ஜுன் 20, சனிக்கிழமை) தொடங்கி வைத்தார்கோவிட்-19 நெருக்கடியினால் பாதிக்கப்பட்டு ஊர் திரும்பிய எண்ணற்ற புலம் பெயர் தொழிலாளர்கள் இருக்கின்ற பகுதிகள் / கிராமங்களில் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் வாழ்வாதாரத்தை உருவாக்கவும் இந்தத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது பீகார் மாநிலத்தில் உள்ள காகிரியா மாவட்டம் பெல்டௌர் ஒன்றியத்தின் தெலிகர் கிராமத்தில் இருந்து இன்று கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டதுஇதற்கான காணொளிக் காட்சியில் சம்பந்தப்பட்ட 6 மாநிலங்களின் முதல்வர்களும், பிரதிநிதிகளும் பல்வேறு மத்திய அமைச்சர்களும் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

பிரதம மந்திரி கரீப் கல்யாண் வேலைவாய்ப்புத் திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்ட பீகார் மாநிலத்தின் காகிரியா மாவட்டம் தெலிகர் கிராமத்தைச் சேர்ந்தவர்களுடன் தொலைதூரக் காணொளிக் காட்சி மூலம் பிரதம மந்திரி கலந்துரையாடினார்.

புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் சிலரிடம் அவர்களின் தற்போதைய வேலை வாய்ப்பு குறித்தும், ஊரடங்கின் போது தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்களின் பலன்கள் அவர்களுக்குக் கிடைக்கிறதா என்றும் பிரதம மந்திரி அவர்களிடம் விசாரித்தார்.

கலந்துரையாடலுக்குப் பிறகு திருப்தியை வெளிப்படுத்திய திரு மோடி கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் ஊரக இந்தியா எவ்வாறு வலுவுடன் காலூன்றி உள்ளது என்றும் ஒட்டுமொத்த தேசத்திற்கும், உலகிற்கும் இந்த நெருக்கடியான தருணத்தில் எவ்வாறு அது உந்துதலை வழங்குகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

 

ஏழைகள் மற்றும் இடம் பெயர்ந்தோரின் நலனில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அக்கறையோடு இருப்பதாகப் பிரதமர் கூறினார்.

 

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் தான் ரூ 1.75 லட்சம் கோடி தொகுப்புடன் சுய-சார்பு இந்தியா பிரச்சாரம் தொடங்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.

 

திரும்பி வர விரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஷிராமிக் விரைவு ரயில்களையும் இயக்கியதாக அவர் கூறினார்.

 

ஏழைகளின் நலனுக்காகவும், அவர்களின் வேலைவாய்ப்புக்காகவும் மிகப்பெரியதொரு பிரச்சாரம் தொடங்கப்பட்டிருப்பதால், இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

 

நமது தொழிலாள சகோதர சகோதரிகள், நமது கிராமங்களில் வாழும் இளைஞர்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் ஆகியோருக்காக இந்தத் திட்டம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே வேலை கொடுப்பதே நமது நோக்கம் என்று அவர் கூறினார்.

 

நிலைத்து நிற்கும் ஊரக உள்கட்டமைப்புக்காக ஏழைகள் மறுவாழ்வு வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ 50,000 கோடி செலவிடப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

 

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புக்காகவும், பல்வேறு பணிகளின் மேம்பாட்டுக்காகவும் 25 பணித் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஏழைகளுக்கான ஊரக வீட்டு வசதி, தோட்டங்கள், ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் குடி தண்ணீர் வசதி அளித்தல், பஞ்சாயத்து பவன்கள், சமுதாயக் கழிவறைகள், ஊரக மண்டிகள், கிராமப்புறச் சாலைகள், மற்றும் மாடுகளுக்கான கொட்டகைகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட இதர உள்கட்டமைப்பு போன்ற கிராமங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த 25 பணிகள் அல்லது திட்டங்கள் இருக்கும்.

 

ஊரகப் பகுதிகளில் நவீன வசதிகளை அளிக்கும் விதமாகவும் இந்த பிரச்சாரம் இருக்கும் என்று பிரதமர் கூறினார். இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் உதவ ஒவ்வொரு கிராமப்புற வீட்டிலும் அதிவேக மற்றும் விலை குறைந்த இணைய வசதியை அளிப்பது முக்கியத் தேவை என்று அவர் கூறினார். நகரங்களை விட கிராமப் பகுதிகள் அதிக அளவில் இணையத்தைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்று பிரதமர் கூறினார். எனவே, இதற்காக கண்ணாடி இழை வடங்களைப் பதிப்பதும், இணைய வசதியை வழங்குவதும் இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.

 

தனது சொந்த கிராமத்தில், தனது குடும்பத்துடன் வசித்துக் கொண்டே இந்த வேலைகள் மேற்கொள்ள முடியும்.

சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு, சுயசார்பு விவசாயிகள் முக்கியம் என்று பிரதமர் கூறினார். விவசாயிகளைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த, விவசாயம் தொடர்பான, தேவையற்ற பல கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும், அரசு அகற்றியது. இதனால், விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருள்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக விற்க முடியும். வேளாண் விளைபொருள்களுக்கு அதிக விலை தரும் வியாபாரிகளுடன், நேரடியாகத் தொடர்புகொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

 

விவசாயிகள், சந்தையுடன் நேரடித் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றும், குளிர்பதன சேமிப்பு உட்பட பல அம்சங்களுக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு அரசு வகை செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

 

125 நாட்களுக்கான இந்தத் திட்டம் மிஷன் முறையில் நடைமுறைப்படுத்தப்படும். பீஹார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்கும் வகையில் 116 மாவட்டங்களில், இருபத்தி ஐந்து பிரிவுகளில் ஆழ்ந்த கவனத்துடன் பணிகள் நடைமுறைப்படுத்தப்படும்.. இந்த இயக்கத்தின் போது மேற்கொள்ளப்படும் பொதுப் பணிகளுக்கென 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதிஆதாரம் அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, சுரங்கம், குடிநீர் தூய்மை, சுற்றுச்சூழல், ரயில்வே, பெட்ரோலியம் இயற்கை எரிவாயு, புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, எல்லைச் சாலைகள், தொலைத் தகவல் தொடர்பு, விவசாயம் ஆகிய 12 அமைச்சகங்கள்/ துறைகள் இணைந்து மேற்கொள்ளும் முயற்சியாக இத்திட்டம் அமையும். 25 கட்டமைப்புப் பணிகள், வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பான பணிகள் ஆகியவற்றை விரைந்து செயல்படுத்த இவை இணைந்து செயல்படும். இந்த முயற்சியின் முக்கிய நோக்கங்களில் சில:

 

  • புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், பாதிக்கப்பட்ட கிராமப்புறக் குடிமக்களுக்கும் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்பை வழங்குதல்

 

  • சாலைகள், வீட்டுவசதி, அங்கன்வாடி, பஞ்சாயத்து பவன், சமுதாய வளாகங்கள், வாழ்வாதாரம் தரக்கூடிய சொத்துக்கள் போன்ற பொதுக் கட்டமைப்பு வசதிகளை கிராமப்புறங்களில் உச்சபட்சமாக ஏற்படுத்தி, வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குதல்

 

  • அடுத்த 125 நாட்களில் ஒவ்வொரு புலம்பெயர் தொழிலாளிக்கும், அவரது திறனுக்கு ஏற்ப, வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பலதரப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். நீண்ட காலத்திற்கு வாழ்வாதாரத்தை விரிவுபடுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் இத்திட்டம் ஆயத்தம் செய்யும்.

 

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் இத்திட்டத்தை முன்னிருந்து செயல்படுத்தும். இந்தத் திட்டம் அனைத்து மாநில அரசுகளின் த்துழைப்புடன் செயல்படுத்தப்படும். இணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேற்பதவியில் உள்ளவர்கள் இதற்கு முன்னோடி அலுவலராக நியமிக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் பல்வேறு திட்டங்கள் நேர்த்தியாகவும், குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுத்தப்படுவதையும் கண்காணிப்பர்.

கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டம் நடைமுறைபடுத்தப்படும் மாநிலங்களின் பட்டியில்

வரிசை எண்

மாநிலத்தின் பெயர்

மொத்த மாவட்டங்கள்

தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டங்கள்

1

பீகார்

32

12

2

உத்தரப்பிரதேசம்

31

5

3

மத்தியப்பிரதேசம்

24

4

4

ராஜஸ்தான்

22

2

5

ஒடிசா

4

1

6

ஜார்க்கண்ட்

3

3

மொத்த மாவட்டங்கள்

116

27

 

முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்படவுள்ள 25 பணிகள் மற்றும் செயல்பாடுகளின் பட்டியல் பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது:

 

வரிசை எண்:

பணி/ செயல்பாடு

வரிசை எண்:

பணி/ செயல்பாடு

1

சமூக சுகாதார மையம் (சி.எஸ்.சி) கட்டுமானம்

14

கால்நடைக் கொட்டகைகள் அமைத்தல்

2

கிராமப் பஞ்சாயத்து பவனின் (அலுவலக) கட்டுமானம்

15

கோழிக் கொட்டகைகளின் கட்டுமானம்

3

14 வது நிதி ஆணையத்தின் நிதியின் கீழ் உள்ள செயல்பாடுகள்

16

ஆடு கொட்டகைக் கட்டுமானம்

4

தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள்

17

மண்புழு உரம் கட்டமைப்புகள் கட்டுமானம்

5

நீர்ப் பாதுகாப்பு மற்றும் அறுவடைப் பணிகள்

18

ரயில்வே

6

கிணறுகள் வெட்டுதல்

19

ரூர்பன் திட்டம்

7

பயிரிடும் பணிகள்

20

பிரதமர் குசும் (விவசாய எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்) 

8

தோட்டக்கலைப் பணிகள்

21

பாரத் நெட்

9

அங்கன்வாடி மையங்களின் கட்டுமானம்

22

கேம்பா திட்டத்தின் கீழ் தோட்டம் அமைத்தல்

10

கிராமப்புற வீடுகள் கட்டும் பணிகள்

23

பிரதமர் உர்ஜா கங்கா திட்டம்

11

கிராமப்புற இணைப்புப் பணிகள்

24

கே.வி.கே வாழ்வாதாரங்களுக்கான பயிற்சி

12

திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைப் பணிகள்

25

மாவட்ட கனிம அறக்கட்டளை அமைக்கும்  (டி.எம்.எஃப்.டி) பணிகள்

13

பண்ணைக் குளங்கள் அமைத்தல்

 

 


                                                                                                             -----



(Release ID: 1655455) Visitor Counter : 388