உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
போர்ட் பிளேர் விமான நிலையத்துக்கு புதிய முனையம்
Posted On:
16 SEP 2020 3:05PM by PIB Chennai
போர்ட் பிளேரில் உள்ள வீர சாவர்கர் சர்வதேச விமான நிலையத்துக்கு புதிய முனையம் விரைவில் கட்டிமுடிக்கப்படவுள்ளது. இந்த விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு 18 லட்சம் விமானப் பயணிகளை கையாள்கிறது. தற்போது, இங்கு விமான போக்குவரத்து அதிகரித்துள்ளதால், இங்கு ரூ.700 கோடி செலவில் புதிய முனையம் அமைக்கும் பணியை விமான நிலையங்கள் ஆணையம் மேற்கொண்டுள்ளது. 3 அடுக்காக அமையவுள்ள இந்த புதிய முனைய கட்டிடம் பரபரப்பான நேரத்தில் 1200 பயணிகளையும், ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளை கையாளும் திறன் உடையதாகவும் இருக்கும். இதில் மொத்தம் 28 பரிசோதனை கவுன்டர்கள் இருக்கும். இந்த முனையத்தில் 65% பணிகள் முடிவடைந்துவிட்டன. அடுத்தாண்டு மத்தியில் இந்த புதிய முனையம் தயாராகிவிடும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1654979 –
-----
(Release ID: 1655082)