எரிசக்தி அமைச்சகம்
வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள் 2020-ஐ உருவாக்கியுள்ள மத்திய மின்சக்தி அமைச்சகம், ஆலோசனைகள் /கருத்துக்களை செப்டம்பர் 30 வரை வரவேற்றுள்ளது
Posted On:
16 SEP 2020 10:25AM by PIB Chennai
மின் நுகர்வோருக்கான உரிமைகளை வழங்குவதற்கான விதிகளை முதல் முறையாக மத்திய மின்சக்தி அமைச்சகம் உருவாக்கியுள்ளது. மின் துறையில் நுகர்வோர்கள் தான் மிக முக்கிய பங்குதாரர்கள் ஆவார்கள்.
அவர்களால் தான் இந்த துறை நிலைத்து நிற்கிறது. அனைவருக்கும் மின்சார இணைப்பை வழங்கியுள்ள நிலையில், நுகர்வோர் திருப்தியில் கவனம் செலுத்துவது முக்கியமாகிறது.
எனவே, முக்கிய சேவைகள், குறைந்தபட்ச சேவை அளவு மற்றும் தரம் ஆகியவற்றைக் கண்டறிந்து அவற்றை நுகர்வோர்களின் உரிமைகளாக அங்கீகரிப்பது அவசியமாகும்.
இதை மனதில் கொண்டு, வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள் 2020-ஐ உருவாக்கியுள்ள எரிசக்தி அமைச்சகம், ஆலோசனைகள்/கருத்துக்களை செப்டம்பர் 30 வரை வரவேற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1654852
********
(Release ID: 1654880)
Visitor Counter : 241
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam