சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19க்கு பிந்தைய மேலாண்மை விதிமுறைகளை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது

Posted On: 13 SEP 2020 2:40PM by PIB Chennai

கொவிட்டில் இருந்து குணமடையும் அனைத்து நோயாளிகளின் தொடர் கவனிப்பு மற்றும் நலனுக்கு முழுமையான அணுகுமுறை தேவைப்படுவதால், கொவிட்-19க்கு பிந்தைய மேலாண்மை விதிமுறைகளை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு உடல் சோர்வு, உடல் வலி, இருமல் தொண்டை வலி, மூச்சு விடுதலில் சிரமம் உள்ளிட்ட உபாதைகளை குணமடைந்த நோயாளிகள் தொடர்ந்து எதிர்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது

இவர்களின் நலனை உறுதிப்படுத்த முழுமையான அணுகுமுறை தேவைப்படுவதால் இந்த விதிமுறைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தனிப்பட்ட அளவில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும், சமூக அளவில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும், மருத்துவமனையில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்தும் இதில் கூறப்பட்டுள்ளது.

தினசரி யோகாசன பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம், காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி, சரிவிகித உணவு, போதுமான தூக்கம் மற்றும் ஓய்வு, புகைபிடித்தல் மற்றும் குடி பழக்கத்தை தவிர்த்தல் ஆகியன தனிநபர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் இங்கே வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653759



(Release ID: 1653828) Visitor Counter : 149