நிதி அமைச்சகம்

வங்கி கடன் பெற்றவர்களுக்கான நிவாரணம் குறித்து மதிப்பீடு செய்வதில் அரசுக்கு உதவ நிபுணர் குழு

Posted On: 10 SEP 2020 7:27PM by PIB Chennai

வங்கிகடன்களுக்கான வட்டி, வட்டிக்கு வட்டி போன்றவற்றை தள்ளுபடி செய்யக் கோரி  கஜேந்திர சர்மா என்பவர் உட்பட பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த விசாரணையின் போது, வங்கி கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்யக் கோரி பல பிரச்னைகள் எழுப்பப்பட்டன. இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். 

இந்த விவகாரம் குறித்து மதிப்பீடு செய்து முடிவெடுக்க நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 
இந்த நிபுணர் குழுவில் கீழ் கண்டவர்கள் இடம் பெற்றுள்னர்: 
(1) திரு. ராஜீவ் மெஹ்ரிஷி, முன்னாள் தலைமை தணிக்கை அதிகாரி - தலைவர்
(ii) டாக்டர். ரவீந்திரா எச்.தேலாக்கிய, முன்னாள் பேராசிரியர் ஐஐஎம் அகமதாபாத் மற்றும் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு முன்னாள் உறுப்பினர்.
(iii) திரு.பி.ஸ்ரீராம், முன்னாள் நிர்வாக இயக்குனர், பாரத ஸ்டேட் பாங்கு மற்றும் ஐடிபிஐ வங்கி

இந்தக் குழு தனது அறிக்கையை ஒரு வாரத்தில் அளிக்கும். 
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்


https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1653099



(Release ID: 1653331) Visitor Counter : 199