உள்துறை அமைச்சகம்

ஸ்ரீ ஹர்மிந்தர் சாகிப்புக்கு எஃப் சி ஆர் ஏ ஒப்புதல் அளித்தது வரலாற்று சிறப்புமிக்க முடிவு என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார்

Posted On: 10 SEP 2020 2:37PM by PIB Chennai

ஸ்ரீ ஹர்மிந்தர் சாகிப்புக்கு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் (எஃப் சி ஆர் ஏ) ஒப்புதல் அளித்தது வரலாற்று சிறப்புமிக்க முடிவு என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று தெரிவித்தார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "ஸ்ரீ தர்பார் சாகிப்பின் தெய்வீகத் தன்மை நமக்கு வலிமையை அளிக்கிறது. பல வருடங்களாகவே, உலகளாவிய சங்கம் அங்கே சேவையாற்ற முடியாத நிலை இருந்தது. ஸ்ரீ ஹர்மிந்தர் சாகிப்புக்கு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ஒப்புதல் அளித்ததன் மூலம் ஸ்ரீ தர்பார் சாகிப்புக்கும், உலகளாவிய சங்கத்துக்கும் இடையே உள்ள சேவை இணைப்பு வலுப்பெற்றுள்ளது. இது ஒரு ஆசிர்வாதமான நிகழ்வு," என்றார்.

இது குறித்து மேலும் கூறிய அமைச்சர், "வாஹே குரு அவர்கள் பிரதமரின் சேவையை பெற்று கொண்டுள்ளதன் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ ஹர்மிந்தர் சாகிப்புக்கு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ஒப்புதல் அளித்ததன் மூலம் நமது சீக்கிய சகோதர சகோதரிகளின் சேவைகள் மீண்டும் வெளிப்படும்," என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1653014


(Release ID: 1653102)