குடியரசுத் தலைவர் செயலகம்

சிங்கப்பூர் தூதர் நியமனக் கடிதத்தை குடியரசுத் தலைவர் காணொலி மூலம் பெற்றுக் கொண்டார்

प्रविष्टि तिथि: 10 SEP 2020 12:14PM by PIB Chennai

சிங்கப்பூர் குடியரசுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள திரு சைமன் வாங்க் வை குயென் தனது நியமனக் கடிதத்தை காணொலி மூலம் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்திடம் இன்று (2020 செப்டம்பர் 10) வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் தூதருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். 

பொதுத் தேர்தலை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக சிங்கப்பூர் அரசுக்கு தனது பாராட்டுதல்களைத் தெரிவித்த குடியரசுத் தலைவர், இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான இரு தரப்பு உறவு மேலும் வலுப்பட்டுள்ளதாகக் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இந்தியாவை ஆதரிப்பதற்காக சிங்கப்பூருக்கு குடியரசுத் தலைவர் நன்றி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1652940


(रिलीज़ आईडी: 1653008) आगंतुक पटल : 236
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Punjabi , Telugu , Malayalam