பாதுகாப்பு அமைச்சகம்
ரபேல் விமானங்களை இந்திய விமானப்படையில் இணைக்கும் நிகழ்வு
प्रविष्टि तिथि:
09 SEP 2020 1:14PM by PIB Chennai
ரபேல் விமானங்களை இந்திய விமானப்படையில் முறைப்படி இணைக்கும் நிகழ்வு 2020 செப்டம்பர் 10 அன்று அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெறும்.
தங்க அம்புகள் எனப்படும் 17-வது படைப்பிரிவில் இந்த விமானங்கள் சேர்க்கப்படும். பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் பிரான்சு ராணுவ அமைச்சர் திருமிகு புளோரென்ஸ் பார்லி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பாளர்கள்.
முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், விமானப்படை தளபதி திரு ஆர் கே எஸ் பதூரியா, பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார் மற்றும் உயரதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.
பிரான்சில் இருந்து புறப்பட்ட முதல் ஐந்து ரபேல் விமானங்கள் 2020 ஜூலை 27 அன்று அம்பாலா விமான தளத்தை வந்தடைந்தன.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652563
(रिलीज़ आईडी: 1652778)
आगंतुक पटल : 182