குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
வைரல் ஆனது காதியின் மின் சந்தை வலைதளம், உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் இந்தியர்கள்
Posted On:
09 SEP 2020 11:48AM by PIB Chennai
இணைய சந்தைப்படுத்துதலில் கால் பதித்துள்ள காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் முயற்சி அகில இந்திய அளவில் பிரபலமடைந்து நாட்டின் தொலைதூர இடங்களையும் கைவினை கலைஞர்களின் பொருள்கள் அடையுமாறு செய்துள்ளது.
www.kviconline.gov.in/khadimask/ என்னும் இணைய முகவரியில் காதி முகக் கவசங்களுடன் இந்த ஆண்டு ஜூலை 7 அன்று தொடங்கப்பட்ட விற்பனை 180 பொருட்களுடன் தற்போது முழு வீச்சை எட்டியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் அதிக பொருட்கள் இதில் இணைக்கப்படும்.
காதி பொருட்களின் இணையதள விற்பனை சுதேசி இயக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய உந்துதலை அளிக்கும் என்றும், உள்ளூர் கைவினை கலைஞர்களை ஊக்கப்படுத்தும் என்றும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய தலைவர் திரு வினய் குமார் சக்சேனா கூறினார்.
"நமது கைவினைக் கலைஞர்கள் தங்களது பொருள்களை விற்க கூடுதல் வாய்ப்பு ஒன்றை இந்த இணையதளம் வழங்கியுள்ளது. தற்சார்பு இந்தியாவை கட்டமைப்பதற்கான பயணத்தில் இது ஒரு வலிமையான முயற்சி ஆகும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ரூபாய் 50 முதல் ரூபாய் 5 ஆயிரம் வரை விலை உள்ள பொருள்கள் இந்த இணைய தளத்தில் கிடைக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652546
(Release ID: 1652608)
Visitor Counter : 167
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam