குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மதிய உணவுத் திட்டத்தில் பாலைச் சேர்க்க குடியரசு துணைத் தலைவர் யோசனை

Posted On: 07 SEP 2020 1:50PM by PIB Chennai

குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவதற்காக காலை உணவிலோ அல்லது மதிய உணவிலோ பாலை சேர்க்கலாம் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று யோசனை தெரிவித்தார்.

 

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் திருமதி ஸ்மிதி இரானியுடன் பேசும் போது இந்த யோசனையை திரு நாயுடு தெரிவித்தார். மதிய உணவுத் திட்டத்தில் பாலை சேர்க்க அனைத்து மாநிலங்களுக்கும் பரிந்துரைக்க மத்திய அரசு பரிசீலிக்கும் என்று குடியரசு துணைத் தலைவரிடம் அமைச்சர் உறுதியளித்தார்.

 

முன்னதாக, கால்நடை மற்றும் பால்வளத் துறை செயலாளர் திரு அனில் சதுர்வேதி குடியரசு துணைத் தலைவரை குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் சந்தித்து, கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள, பண்ணைகள் மற்றும் பால்வளத் தொழில்களுக்கு உதவ எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளைக் குறித்து எடுத்துரைத்தார்.

 

பண்ணைத் துறையில் தொழில்முனைதலை அரசு ஊக்குவித்து வருவதாகவும், ஊக்கத்தொகை மற்றும் கொள்கை இடையீடுகள் மூலம் ஆதரவை வழங்கி வருவதாகவும் குடியரசு துணைத் தலைவரிடம் திரு சதுர்வேதி தெரிவித்தார். இந்தத் தொழிலுக்கான கடன்களை மறுசீரமைக்க நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க கால்நடைத் துறை பரிசீலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651938


 

*****



(Release ID: 1651970) Visitor Counter : 206