பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

மூன்றாவது தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பரில் கொண்டாடப்படுகிறது

Posted On: 06 SEP 2020 6:34PM by PIB Chennai

மூன்றாவது தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பரில் கொண்டாடப்படுகிறது. முழுமையான ஊட்டச்சத்துக்கான பிரதமரின் விரிவான திட்டத்தின் (POSHAN Abhiyaan - PM’s Overarching Scheme for Holistic Nourishment) கீழ் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் இந்த தினம் 2018-இல் தொடங்கப்பட்டது.

 

இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பான மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் இணைந்து, கிராமங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் தேசிய அளவில் இதைக் கொண்டாடுகிறது.

 

குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் களைவதும், பெண்களுக்கு ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதும் இந்தத் திட்டத்தின் நோக்கங்களாகும்.

 

தன்னுடைய புகழ்பெற்ற நிகழ்ச்சியான மனதின் குரலின் சமீபத்திய பதிப்பில், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தங்களது திறமைகளை முழு அளவில் வெளிப்படுத்துவதில் ஊட்டச்சத்து ஆற்றும் பங்கைப் பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக கடந்த சில வருடங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றியும் அவர் கூறியிருந்தார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651827(Release ID: 1651876) Visitor Counter : 195