குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
இந்தியாவை தற்சாற்படையச் செய்யும் நோக்கில் ஊதுவத்தித் தயாரிப்புக்கான ஆதரவை இந்திய அரசு பன்மடங்கு அதிகரித்துள்ளது
Posted On:
06 SEP 2020 11:49AM by PIB Chennai
4 செப்டம்பர் 2020 அன்று புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டிருப்பதன் மூலம் ஊதுவத்தித் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் ஊதுவத்தித் தொழிலுக்குமான ஆதரவை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
200 தானியங்கி ஊதுவத்தித் தயாரிப்பு இயந்திரங்களை வழங்க ஏற்கனவே முடிவெடுத்திருந்த நிலையில் 400 தானியங்கி அகர்பத்தித் தயாரிப்பு இயந்திரங்களை வழங்க தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்பூர்த்தி திட்டத்தின் கீழ் ரூபாய் 50 கோடி செலவில் 10 குழுமங்கள்அமைக்கப்படும். இதன் மூலம் 5 ஆயிரம் கலைஞர்கள் பலன் அடைவார்கள். இயந்திரத் தயாரிப்பை மேம்படுத்தவும், பொருள்களில் புதுமைகளைப் புகுத்துவதை ஊக்குவிக்கவும் இரண்டு சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.
கையால் ஊதுபத்தித் தயாரிக்கும் கலைஞர்களுக்கும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். ரூபாய் 2.66 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட இருந்த திட்டத்தின் மொத்த மதிப்பு தற்போது ரூபாய் 55 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் இதை செயல்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு, இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1651736
(Release ID: 1651831)
Visitor Counter : 260
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam