சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

அதிக அளவிலான கொரோனா நோயாளிகள் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 30 லட்சத்தை கடந்தது


பரிசோதனை-கண்காணிப்பு-சிகிச்சை என்னும் மத்திய அரசின் உத்தியின் மூலம் இந்தியாவில் குணமடைதல் விகிதம் அதிகமாகவும், இறப்பு எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது.

Posted On: 04 SEP 2020 3:18PM by PIB Chennai

அதிக அளவிலான கொரோனா நோயாளிகள் தொடர்ந்து குணமடைந்து வரும் நிலையில், இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தைக் (30,37,151) கடந்துள்ளது.

 

சர்வதேச சராசரியுடன் ஒப்பிடும் போது இறப்பு விகிதிம் இந்தியாவில் குறைவாக இருக்கும் நிலையில் (தற்போதைய நிலவரப்படி 1.74%), வெண்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெறுவோரின் விகிதம் மிகக் குறைந்த அளவில் மட்டுமே உள்ளது (0.5 சதவீதத்துக்கும் கீழ்).

 

இரண்டு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 3.5 சதவீதத்துக்கும் குறைவானவர்களே பிராண வாயு இணைப்புள்ள படுக்கைகளில் உள்ளனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1651265

***


(Release ID: 1651309) Visitor Counter : 196