பாதுகாப்பு அமைச்சகம்

விமானப்படையின் தலைமை தளபதி கிழக்கு விமானப்படைத் தளத்தை பார்வையிட்டார்

Posted On: 03 SEP 2020 4:33PM by PIB Chennai

விமானப்படைத் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர் கே எஸ் பதூரியா, கிழக்கு விமானப்படைத் தளத்திற்கு 2 செப்டம்பர் அன்று வருகை தந்து பார்வையிட்டார்.

இந்த விமான தளத்தில் உள்ள செயல்பாட்டு முறைகளையும், தயார் தன்மையையும், தொடர்புடைய விமானப்படை தலைமை அலுவலர்கள் அவருக்கு எடுத்துரைத்தனர்.

இந்தத் தளத்தை பார்வையிட்ட விமானப்படைத் தலைமை தளபதி, வீரர்களிடம் உரையாற்றினார். தளத்தை முழுமையான தயார் நிலையுடன் வைத்திருப்பதற்காக வீரர்களையும், அதிகாரிகளையும் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

                                                                 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651015

 

MBS/GB


***


(Release ID: 1651065) Visitor Counter : 229