சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கடந்த 24 மணி நேரத்தில் 11.7 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகளுடன், தினசரி பரிசோதனைகளில் இதுவரை கண்டிராத உயரத்தை இந்தியா எட்டியுள்ளது
Posted On:
03 SEP 2020 11:59AM by PIB Chennai
கடந்த இரண்டு நாட்களாக தினமும் 10 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்த நிலையில், தினசரி பரிசோதனைகளில் இதுவரை கண்டிராத உயரத்தை இந்தியா இன்று எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 11.7 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் (11,72179) செய்யப்பட்டுள்ளன. இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 4.5 கோடியை கடந்துள்ளது (4,55,09,380).
நாட்டில் கொவிட்-19 பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்துள்ளதை இது காட்டுகிறது. 30 ஜனவரி அன்று ஒரு நாளைக்கு வெறும் 10 பரிசோதனைகளை செய்து வந்த நிலையில், தற்போதைய தினசரி சராசரி 11 லட்சத்தை எட்டியுள்ளது.
இந்தியாவின் தினசரி பரிசோதனைகளின் எண்ணிக்கை உலகத்திலேயே அதிகமானவற்றில் ஒன்றாகும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால், பாதிப்புகள் விரைவில் கண்டறியப்பட்டு, சிறப்பான மருத்துவ சிகிச்சை உடனடியாக அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தொற்றின் பரவலும் குறைந்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும் : https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1650918
****
(Release ID: 1650925)
Visitor Counter : 207
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam