சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இது வரை செய்யப்பட்ட 4.33 கோடி பரிசோதனைகளில், 1.22 கோடி பரிசோதனைகளை கடந்த இரண்டு வாரங்களில் இந்தியா செய்துள்ளது, தமிழகம் முன்னிலை

Posted On: 01 SEP 2020 3:11PM by PIB Chennai

'பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை' என்னும் மத்திய அரசின் தாரக மந்திரத்தைப் பின்பற்றி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக அளவில் கொவிட்-19 பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்தியாவின் ஒட்டுமொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 4.3 கோடியை இன்று கடந்தது (4,33,24,834). இதில், 1,22,66,514 பரிசோதனைகளை கடந்த இரண்டு வாரங்களில் இந்தியா செய்துள்ளது.

 

கொவிட்-19 பரிசோதனைகளின் எண்ணிக்கையை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தமிழ் நாடு, உத்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் பரிசோதனைகள் செய்வதில் முன்னணியில் உள்ளன. மொத்த பரிசோதனைகளில் இந்த மூன்று மாநிலங்கள் 34% பங்காற்றியுள்ளன.

 

ஒரு நாளைக்கு இந்தியாவில் செய்யப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,16,920 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

 

           

****



(Release ID: 1650383) Visitor Counter : 158