குடியரசுத் தலைவர் செயலகம்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து
Posted On:
30 AUG 2020 6:40PM by PIB Chennai
ஓணம் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் : "ஓணம் திருநாளை முன்னிட்டு நாட்டின் சக குடிமக்களுக்கு, குறிப்பாக கேரள மாநில சகோதர சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓணம் பண்டிகை நமது வளமான பாரம்பரியத்தின் சின்னம். இயற்கையின் புதிய பயிர் அறுவடையாகி வந்துசேரும் தருணத்தில் இப்பண்டிகை இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைகிறது.
கோவிட்-19 பெருந்தொற்றுத் தருணத்தில் பண்டிகைகளைக் கொண்டாடும்போது சமுதாயத்தின் நலிந்த பிரிவினரை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும், நமது குடும்பத்தினரையும் பொதுவாக சமுதாயத்தின் அனைவரையும் பாதுகாக்கப் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தத் திருவிழா, நமது நாட்டில் கூட்டுறவையும், சகோதரத்துவ உணர்வையும் வலுப்படுத்தவும் இயற்கை அன்னையுடன் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வளம் சேர்க்கவும் உதவட்டும் " எனக் குறிப்பிட்டுள்ளார்.
******
(Release ID: 1650001)
Visitor Counter : 206