குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஓணம் பண்டிகையையொட்டி மக்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
30 AUG 2020 1:17PM by PIB Chennai
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, குடியரசுத் துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஓணம் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு எனது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை நாம் கொண்டாடும் வேளையில், மகாபலி மன்னன் பின்பற்றி வந்த நேர்மை, ஒருமைப்பாடு, கனிவு, கருணை, தன்னலமற்ற தியாக உணர்வு போன்ற நற்பண்புகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கோவிட் சுகாதாரம் மற்றும் தூய்மை வழிகாட்டி நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, ஓணம் பண்டிகையை புதுமையான முறையில், வீடுகளிலேயே கொண்டாடுமாறு நாட்டு மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.
மகிழ்ச்சிகரமான இந்தப் பண்டிகை, நம் நாட்டில் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தட்டும்“ என்று தெரிவித்துள்ளார்.
*******
(வெளியீட்டு அடையாள எண்: 1649808)
வருகையாளர் எண்ணிக்கை : 234