பிரதமர் அலுவலகம்

தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2020-ஐ பெற்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 29 AUG 2020 6:50PM by PIB Chennai

தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2020-ஐ பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2020-ஐ பெற்றுள்ள திறமையான அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துகள்! இந்த வீரர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. இவர்களது வெற்றி வளரும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. விருது வென்றவர்களின் வருங்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

****


(Release ID: 1649753) Visitor Counter : 139