நிதி அமைச்சகம்

வங்கிக் கடன்களின் மீதான கோவிட்-19 சார்ந்த அழுத்தத்தைப் போக்குவதற்கான தீர்வுக் கட்டமைப்பைச் செயல்படுத்துவது குறித்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் நிதி அமைச்சர் ஆய்வு நடத்தவிருக்கிறார்

Posted On: 30 AUG 2020 11:37AM by PIB Chennai

வங்கிக் கடன்களின் மீதான கோவிட்-19 சார்ந்த அழுத்தத்தைப் போக்குவதற்கான தீர்வுக் கட்டமைப்பைச் செயல்படுத்துவது குறித்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாகங்களுடன் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் 3 செப்டம்பர் 2020 அன்று ஆய்வு நடத்தவிருக்கிறார்.

 

நம்பகத்தன்மையின் அடிப்படையில் புத்தாக்கக் கட்டமைப்பை வணிகங்கள் மற்றும் வீடுகள் பெறுவதற்கான வசதியை அளித்தல், வங்கிக் கொள்கைகளை இறுதி செய்தல் மற்றும் கடன் பெறுபவர்களைக் கண்டறிதல் ஆகியவற்றைக் குறித்து கவனம் செலுத்தப்போகும் இந்த ஆய்வுக் கூட்டம், எளிதான மற்றும் துரித செயல்படுத்துதலுக்கு தேவையான விஷயங்கள் குறித்தும் விவாதிக்கும்.

 

*********


(Release ID: 1649743) Visitor Counter : 211