பிரதமர் அலுவலகம்

ராணி லட்சுமி பாய் மத்திய விவசாயப் பல்கலைக் கழகத்தின் கல்லூரி மற்றும் நிர்வாகக் கட்டடங்களை பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 28 AUG 2020 8:30PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, நாளை 12.30 மணியளவில், காணொளிக் காட்சி மூலம் ராணி லட்சுமி பாய் மத்திய விவசாயப் பல்கலைக் கழகத்தின் கல்லூரி மற்றும் நிர்வாகக் கட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

ராணி லட்சுமி பாய் மத்திய விவசாயப் பல்கலைக் கழகம், புந்தல் காண்ட் பிராந்தியத்தின் முக்கியமான நிறுவனமாக ஜான்சியில் அமைந்துள்ளது.

இந்தப் பல்கலைக்கழகம் 2014-15-இல் தனது முதலாவது கல்வி அமர்வைத் தொடங்கியது. விவசாயம், தோட்டக்கலை மற்றும் வனப்படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களை அது வழங்குகிறது.

இந்தப்பல்கலைக்கழகத்தின் முக்கிய கட்டடம் உருவாகி வருவதால்,  தற்போது  அது, ஜான்சியில் உள்ள இந்தியன் கிராஸ்லேண்ட் அன்ட் போடர் ஆராய்ச்சி நிறுவனத்தில்  இயங்கி வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது, பல்கலைக்கழகத்தின் பல்வேறு மாணவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடுவார்.

******


(रिलीज़ आईडी: 1649506) आगंतुक पटल : 198
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam