பிரதமர் அலுவலகம்

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து: மேஜர் தியான் சந்த் அவர்களுக்கு அஞ்சலி

Posted On: 29 AUG 2020 10:37AM by PIB Chennai

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திரமோடி விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற இந்திய ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்த் அவர்களுக்கும் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

“தேசிய விளையாட்டு தினம் என்பது பல்வேறு விளையாட்டுகளில் இந்தியாவிற்காக விளையாடி நமது தேசத்தைப் பெருமைப்படுத்திய முன்னோடி விளையாட்டு வீரர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கொண்டாடும் நாள். அவர்களுடைய பற்றும் உறுதியும் மிகவும் சிறந்தவை.

தேசிய விளையாட்டு தினமான இன்று, மேஜர் தியான் சந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். ஹாக்கி மட்டையை வைத்து அவர் ஆற்றிய அற்புதங்கள் ஒருபோதும் மறக்க முடியாதவை.

.அது மட்டுமின்றி, நமது திறமையான விளையாட்டு வீரர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த குடும்பங்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் போன்றோர் அளித்திருக்கும் சிறந்த ஆதரவைப் பாராட்டும் நாள் இது.

இந்தியாவில் விளையாட்டுகளைப் பிரபலப்படுத்தவும், விளையாட்டுத் திறமைகளை ஆதரிக்கவும் இந்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில், ஒவ்வொருவரும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை தங்கள் அன்றாட வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகப் பின்பற்றுமாறு  கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு செய்வதால் பல நன்மைகள் உள்ளன. எல்லோரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கட்டும்!”(Release ID: 1649477) Visitor Counter : 181