பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                
                    
                    
                        பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டம் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பிரதமர் மகிழ்ச்சி
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                28 AUG 2020 11:03AM by PIB Chennai
                
                
                
                
                
                
                பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரதமர் ஜன்தன் யோஜனா வெற்றிகரமாக செயல்படுவதற்கு அயராது உழைத்த அனைவருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
 
“ஆறு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. வங்கிச் சேவை இல்லாத அனைவருக்கும் வங்கிச் சேவை அளிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, வாழ்க்கையை மாற்றியமைத்து வறுமையைப் போக்கும் பல திட்டங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. இதனால் பல கோடி மக்கள் பயன் அடைந்திருக்கிறார்கள்” என்று பிரதமர் கூறினார்.
 
“பல குடும்பங்களின் எதிர்காலம் பாதுகாப்பாக அமைவதற்கு உதவிய இந்த பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டத்திற்கு நன்றி. இத்திட்டத்தால் பயன்பெற்ற மக்களில் மிக அதிக அளவிலான சதவிகிதத்தினர் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் பெண்கள். பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதற்கு அயராது பணியாற்றிய அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்” 
 
 
***
                
                
                
                
                
                (Release ID: 1649159)
                Visitor Counter : 291
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam