சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

8 லட்சத்துக்கும் அதிகமான தினசரி பரிசோதனைகளை நடத்தி வரும் இந்தியா, 3.5 கோடிக்கு மேல் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளது


ஒரு மில்லியனுக்கான பரிசோதனைகள் (TPM) உயர்வு; இன்று 25,574 ஆக உயர்ந்தது

Posted On: 23 AUG 2020 1:30PM by PIB Chennai

2020 ஜனவரியில் புனேவில் உள்ள ஒரு ஆய்வகத்தின் மூலம் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையிலிருந்து தொடங்கி, இந்தியா இன்று 3.5 கோடிக்கும் அதிகமான ஒட்டுமொத்ப்பரிசோதனைகளைத் தாண்டிவிட்டது. கடந்த ஆறு நாட்களில் இருந்து தொடர்ந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள், கடந்த 24 மணி நேரத்தில் 8,01,147 கோவிட்-19 பரிசோதனைகள் மூலம், மொத்தம் 3,52,92,220 ஐத் தொட்டுள்ளது.

பரிசோதனையின் விரைவான உயர்வு மையப்படுத்தப்பட்ட மற்றும் தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையின் மூலம் மத்திய அரசின் தீவிரப் பரிசோதனைத் திட்டத்தைத் திறம்பட செயல்படுத்துவதன் விளைவாகும்.

கடந்த மூன்று வாரங்களில் அதிகரித்து வரும் தினசரி சராசரி பரிசோதனைகள் நாடு முழுவதும் கோவிட்-19 பரிசோதனைகளை மேம்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் வலுவான சித்தரிப்பை முன்வைக்கின்றன.

http://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001DQNS.jpg

http://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image0025Q45.jpg

தினசரி பரிசோதனையின் அதிகரிப்பு தொடர்ந்து சராசரியாக தொற்றால் பாதிக்கப்பட்டோர் விகிதத்தில் குறைவை ஏற்படுத்தியுள்ளது.

“பரிசோதித்தல், கண்காணித்தல், சிகிச்சையளித்தல்” கொள்கையில் கூர்மையான கவனம் செலுத்தி, ஒரு மில்லியனுக்கான பரிசோதனைகள் இன்று 25,574 ஐத் தொட்டுள்ளன. தீவிர பரிசோதனையின் மூலம் தான் நோய்த் தொற்றானவர்களை அடையாளம் காண முடியும், அவர்களின் தொடர்புகள் சரியான நேரத்தில் கண்காணிக்கப்பட்டு உடனடியாக தனிமைப்படுத்தப்படுகின்றனர், அத்துடன் கடுமையான மற்றும் சிக்கலான நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

பரிசோதனைத் திட்டம் தேசிய ஆய்வக வலையமைப்பின் நிலையான விரிவாக்கத்தையும் உறுதி செய்தது. இன்று, அரசுத்துறையில் 983 ஆய்வகங்கள் மற்றும் 532 தனியார் ஆய்வகங்கள் உள்ள நிலையில், 1515 ஆய்வகங்கள் மக்களுக்கு விரிவான பரிசோதனை வசதிகளை வழங்கி வருகின்றன. இவை வருமாறு:

  • Real-time RT PCR அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 780 (அரசு: 458 + தனியார்: 322)
  • TrueNat அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 617 (அரசு: 491 + தனியார்: 126)
  • CBNAAT அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 118 (அரசு: 34 + தனியார்: 84)

*********


(Release ID: 1648080) Visitor Counter : 172