தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இஎஸ்ஐசி-யின் அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டப் பயனாளிகளுக்கான தகுதி நிலைகளில் தளர்வு

Posted On: 21 AUG 2020 11:04AM by PIB Chennai

இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் பயன் பெறும் தொழிலாளர்கள், வேலையில்லாமல் இருக்கும்போது, அவர்களுக்கு அடல் பிமித்  வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ் நிவாரணத் தொகை அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை, 2021 ஜூன் 30-ம் தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதென இஎஸ்ஐ நிறுவனம் தீர்மானித்துள்ளது. கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் தமது வேலைகளை இழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை அளிப்பதற்காக, இத்திட்டத்தின் கீழ் உள்ள தற்போதைய நிபந்தனைகளை தளர்த்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  தளர்த்தப்பட்ட நிபந்தனைகளின்படி, அதிகரிக்கப்பட்டுள்ள நிவாரணத்தொகை 24.03.2020-லிருந்து 31.12.2020 வரையிலான காலத்திற்கு வழங்கப்படும். அதற்கு பிறகு, அதாவது 01.01.2021 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு தளர்த்தப்படாத முந்தைய நிபந்தனைகளுடன் இந்தத் திட்டம்  தொடரப்படும்.  31.12.2020-க்கு பிறகு தளர்த்தப்பட்ட நிபந்தனைகள் குறித்து மறு ஆய்வு செய்யப்படும்.

     மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைக்கான இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு சந்தோஷ் குமார் கங்குவார் தலைமையில், நேற்று நடைபெற்ற இஎஸ்ஐ நிறுவனத்தின் 182-வது கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1647516



(Release ID: 1647537) Visitor Counter : 221