கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

கப்பல் அமைச்சகம் மற்றும் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் இடையே துறைமுக மற்றும் கடல்சார் துறையில் திறன் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted On: 20 AUG 2020 3:35PM by PIB Chennai

கடல்சார் துறையில் பரந்த வேலை வாய்ப்புகளுக்கான நன்மைகளைப் பெறுவதற்கும், அவர்களின் திறன் தொகுப்புகளுக்குச் சான்றளிக்கும் நோக்கில், கப்பல் அமைச்சகம் மற்றும் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (புரிந்துணர்வு ஒப்பந்தம்) இன்று டிஜிட்டல் முறையில் கையெழுத்திடப்பட்டது.

 

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் (தனிப் பொறுப்பு) மற்றும் ரசாயனங்கள், உரங்கள் அமைச்சர் திரு. மன்சுக் மண்டவியா மற்றும், மாநிலங்களுக்கான மின்சாரம் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஆர். கே. சிங் மற்றும் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் அமைச்சகம் மற்றும் மூத்த அதிகாரிகள். முன்னிலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சர் டாக்டர். மகேந்திர நாத் பாண்டே, கப்பல் அமைச்சகத்தைத் திறமைப்படுத்துவதன் மூலமும், அவர்களின் தரத்தை உலகத் தரத்திற்கு ஏற்றவாறு உருவாக்குவதன் மூலமும் வேலைக்குத் தயாரான பணிக்குழுவை உருவாக்க முயற்சித்தமைக்கு வாழ்த்து தெரிவித்தார். நாம் ஒன்றிணைந்து திறனை மேம்படுத்துவதற்கும், திறமை வாய்ந்த துறைகளில் புதுமைகளை உருவாக்குவதற்கும் திட்டங்களை வடிவமைத்துச் செயல்பட்டால், "இந்தியாவை உலகின் திறன்களின் தலைநகராக மாற்றும் பார்வை தொடர்ந்து வளர்ச்சி பெறும். கடல்சார் போக்குவரத்து என்பது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் ஒரு முக்கியமான பிரிவு. கப்பல் அமைச்சகத்துடனான இந்தக் கூட்டுத்திட்டம் இந்தக் குறிக்கோளிலிருந்து பெறப்பட்டது. நமது பணியாளர்களின் திறன்களை ஊக்குவித்து,  கூடுதலாகத்  திறமைப்படுத்துவதன் மூலம், அவர்களது திறன்களை உலகலாவிய தரத்திற்கான திசையை நோக்கிக் கொண்டு செல்வதற்கான முன்முயற்சிகளைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சரியான உதவி, பயிற்சி மற்றும் வெளிப்பாடு மூலம் நமது இளைஞர்கள் புதிய உயரங்களை எட்டுவார்கள், மேலும் கப்பல் துறையின் வளர்ச்சியில் பங்களிப்பார்கள் என்பது எனது நம்பிக்கை என்று தெரிவித்தார். 

புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்த கப்பல் துறை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு. மன்சுக்மண்டவியா, இந்த கூட்டு முயற்சி, பரந்த வேலைவாய்ப்புகளையும், கடலோரப் பகுதிகளில் இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகளையும் வழங்கும் என்று கூறினார். மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கப்பல் அமைச்சகத்தின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் கடலோர சமூக மேம்பாட்டின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் என்று தெரிவித்தார். இந்தியாவிலும், உலகளவிலும் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் துறையின் வளர்ச்சிக்குத் திறமையான மனிதவளத்தை இது வளர்க்கும் என்று திரு. மண்டவியா கூறினார். "நமது துறைமுகங்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் நம்நாட்டின் பொருளாதார வலிமையை வளர்ப்பதற்கு நாம் அர்ப்பணித்துள்ளோம். கடல் போக்குவரத்துத்துறை எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். நமது இளைஞர்களை மேம்படுத்துவதற்கும், தொழில்நுட்பம் சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டை எதிர்காலத்தில் வலுப்படுத்துவதற்கும், கடல்சார் துறையின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதில் நாம் உறுதியான நிலைப்பாடு கொண்டுள்ளோம். இந்தக் கூட்டுமுயற்சி, துறைமுகங்கள் மற்றும் கடல்சார் துறையின் வளர்ச்சியில் உறுதியாக உள்ள நமது இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும். கூடுதலாக, இது இந்தியாவிலும் சர்வதேசக் கடலோரப் பகுதிகளிலும் நமது நாட்டினருக்கு பல வேலைவாய்ப்புகளுக்கு வாசல் திறக்கும் ”என்றும் அவர் தெரிவித்தார்.

***********



(Release ID: 1647514) Visitor Counter : 188