சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியா தனது உயர் சோதனையின் பாதையில் தொடர்கிறது: தொடர்ச்சியாக நாள் ஒன்றுக்கு 2வது நாளில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகள்
ஒரு மில்லியனுக்கும் (டிபிஎம்) அதிகமான சோதனைகள் தொடர்ந்து அதிகரிப்பு, 23,002–ஐ தாண்டியது; அதே நேரத்தில் பாதிப்பு கிட்டதட்ட 8 சதவிகிதத்தில் நிலையாக உள்ளது
Posted On:
19 AUG 2020 4:33PM by PIB Chennai
“சோதனை, கண்டறிதல் மற்றும் சிகிச்சை” குறித்த செயல்திட்டத்தை நோக்கமாகக் கொண்டு, இந்தியா 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 மாதிரிகளைத் தொடர்ச்சியாக 2 -வது நாளாக சோதனை செய்துள்ளது. நாளொன்றுக்கு . 10 லட்சம் சோதனைத் திறனைத் தொடுவதற்கு ஒரு நாளில் மேற்கொள்ளப்படும் சோதனைகளின் எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்க வேண்டும் என்ற வலுவான தீர்மானத்துடன், கடந்த 24 மணி நேரத்தில் 8,01,518 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன.
குறிப்பிட்ட தேதியின்படி ஒட்டுமொத்த சோதனை 3,17,42,782 -ஐ எட்டியுள்ளது. ஒரு மில்லியனுக்கான சோதனைகளும் 23,002 ஆக அதிகரித்துள்ளன.
பெருமளவிலான சோதனையின் மூலமே நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணமுடியும்; அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்க முடியும்; மேலும் அவர்களைத் தனிமைப்படுத்தி, சிறந்த முறையில் உரிய சிகிச்சை அளிப்பதை சரியான நேரத்தில் மருத்துவப் பராமரிப்பு மூலம் உறுதி செய்ய முடியும். இந்தியாவின் தொடர்ச்சியான மீட்பு விகிதம் குணமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் இடையிலான இடைவேளியை விரிவாக்குவது மற்றும் இறப்பு விகிதம் படிப்படியாகக் குறைந்து வருவதில் உயர் சோதனைகளின் தொடர்ச்சியான நிலை முக்கியமான பங்கு வகிக்கிறது
ஒரு தரம் வாய்ந்த மற்றும் வளர்ந்து வரும் செயல்திட்டத்தின் பாதையை இந்தியா பின்பற்றி, அதன் தேசிய அளவிலான பொது மற்றும் தனியார் துறைகளில் ஒட்டுமொத்த ஆய்வகங்களை வலுப்படுத்தியுள்ளது. 2020 ஜனவரி-யில் ஒரு ஆய்வகத்திலிருந்து தொடங்கி, இன்று 1486 ஆய்வகங்கள் நாட்டில் உள்ளன; அரசுத் துறையில் 975 ஆய்வகங்களும், தனியார் துறையில் 511 ஆய்வகங்களும் உள்ளன. அவை பின்வருமாறு:
• நிகழ்நேர ஆர்டி பி.சி.ஆர் அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 762 (அரசு: 452 + தனியார்: 310)
• ட்ரூநாட் அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 607 (அரசு: 489 + தனியார்: 118)
• சிபிஎன்ஏஏடி சார்ந்த சோதனை ஆய்வகங்கள்: 117 (அரசு: 34 + தனியார்: 83)
(Release ID: 1647194)
Visitor Counter : 185