சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியா மற்றொரு உச்சத்தைத் தொட்டு உள்ளது: மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியது

கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் அதிகபட்ச அளவாக 60,091 பேர் குணமடைந்து உள்ளனர்

இந்தியாவில் குணமடைவோர் விகிதமும் உச்ச அளவை அடைந்து, 73%த்தைத் தாண்டிவிட்டது

Posted On: 19 AUG 2020 11:24AM by PIB Chennai

விரைவாக மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட்-19 பரிசோதனைகளில் இதுவரையிலும் மொத்தமாக 3 கோடி பரிசோதனைகள் என்ற அளவைத் தாண்டி இந்தியா உச்ச அளவை அடைந்து உள்ளது.  அதே போன்று மற்றொரு உச்ச அளவாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 20 லட்சத்தை தாண்டி உள்ளது (20,37,870).

இந்த இரண்டு சாதனைகளோடு மூன்றாவது சாதனையாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு நாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60,091 என்ற உச்ச அளவை அடைந்து உள்ளது.  கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனயில் இருந்து விடுவிக்கப்படுபவர்கள் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (மிதமான மற்றும் நடுத்தரமான நோய்நிலைமை உள்ளவர்கள்) எண்ணிக்கை அதிகரித்திருப்பதினால் குணம் அடைபவர்களின் விகிதமானது உச்ச அளவாக 73%ஐ கடந்து உள்ளது (73.64%).  இது தொற்றுள்ளவர்கள் இடையில் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்துள்ளது.  இந்த இறப்பு விகிதம் இன்று புதிய சாதனையாக 1.91%க்கும் குறைவாக உள்ளது.

சாதனை அளவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை நாட்டில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கைக்கும் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதத்தை குறைத்து உள்ளது.  அதாவது தற்போது இந்த விகிதம் மொத்த தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட ¼ என்று (24.45% மட்டும்) உள்ளது.  குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதும் இறப்பு விகிதம் குறைந்து வருவதும் இந்தியாவின் படிப்படியான செயல் உத்தியானது, பலன் தருவதை எடுத்துக்காட்டுகிறது.  இந்தியா தற்போது சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையைவிட (6,76,514) குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையை 13,61,356 என பதிவிட்டு உள்ளது.

ஜனவரி 2020 தொடக்கத்தில் இருந்தே இந்திய அரசு, முன்தடுப்பு நோக்கத்துடனான மற்றும் தாமே முன்வந்து செயலாற்றக் கூடிய மற்றும் நிர்வகிக்கக் கூடிய செயல் உத்தியை நாட்டில் விடாமுயற்சியுடன் படிப்படியாக நடைமுறைப்படுத்தி வந்தது. குறிப்பிட்ட இலக்குகளில் கவனம் செலுத்திய, ஒருங்கிணைந்து செயலாற்றிய மற்றும் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஈடுபட்ட அணுகுமுறையானது வெற்றியை தருகிறது 

தொடர்ச்சியான பராமரிப்பு அணுகுமுறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் தீவிரமாக பரிசோதித்தல், தொடர்பு உள்ளவர்களை விரைவாக தடம் அறிதல் மற்றும் பலன் அளிக்கும் வகையில் சிகிச்சை அளித்தல் என்ற வழிமுறைகள் மத்திய அரசால் கடைபிடிக்கப்பட்டது.  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் ஒருங்கிணைந்து இந்த வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.  திறன்மிக்க கண்காணிப்பில் கவனம் குவித்தல் மற்றும் வீடு வீடாகச் சென்று தொடர்புடையவர்களை தடம் அறிதல் போன்ற செயல்பாடுகள் கோவிட்-19 தொற்றுள்ளவர்களை தொடக்க நிலையிலேயே கண்டறியவும் அடையாளம் காணவும் உதவின.  மிதமான மற்றும் நடுத்தரமான தொற்றுள்ளோர் கண்காணிப்புடன் வீட்டில் தனிமைப்படுத்jதப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.  முழுமையான பராமரிப்புக்கான நிலையான செயல்பாடுகள் என்ற அணுகுமுறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிலையான மருத்துவமனை மேலாண்மை செயல்திட்டம் என்பதன் கீழ் தீவிரமான மற்றும் ஆபத்து நிலையிலான நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களின் முயற்சிகளோடு ஒருங்கிணைந்து இந்திய அரசு நாடு முழுவதும் பலவகையாகப் பிரிக்கப்பட்ட தொற்றுள்ள நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்காக மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வருகிறது.  அதாவது பிரத்யேகமான கோவிட் பராமரிப்பு மையம் (DCCC) , பிரத்யேகமான கோவிட் சுகாதார மையம் (DCHC) மற்றும் பிரத்யேகமான கோவிட் மருத்துவமனை (DCH) ஆகிய மூன்று விதமான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.  இத்தகைய மையங்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருகிறது.  இன்றைய தேதியில் 1,667 பிரத்யேகமான கோவிட் மருத்துவமனைகள், 3,455 பிரத்யேகமான கோவிட் சுகாதார மையங்கள் மற்றும் 11,597 பிரத்யேக கோவிட் பராமரிப்பு மையங்களும் உள்ளன. ஒட்டுமொத்தமாக இவையனைத்தும் சேர்ந்து 15,45,206 தனிமைப்படுக்கைகள், 2,03,959 ஆக்சிஜன் இணைக்கப்பட்ட படுக்கைகள் மற்றும் 53,040 ஐசியூ படுக்கைகளைக் கொண்டு உள்ளன. 

பராமரிப்பு மற்றும் சேவைகள் வழங்குவதை மறுக்கும் எந்தவொரு செயலையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற நிலையில் திறன்மிக்க ஆம்புலன்ஸ் சேவைகள் வழியாகவும் உடலுக்குள் கருவி மூலமாக இல்லாமல் ஆக்சிஜன் செலுத்தும் பயன்பாடு மற்றும் பரிசோதனை மூலமான சிகிச்சைகள் ஆகியவற்றின் மூலம் கோவிட்-19 நோயாளிகளை மருத்துவரீதியில் நிர்வகிப்பது சாத்தியமாகி உள்ளது.  புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தனது தொலை மருத்துவ ஆலோசனை மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத்துவர்களின் மருத்துவத் திறமைகளை கட்டமைக்க உதவி உள்ளது.  இந்த பிரத்யேகமான முன்னெடுப்பு முயற்சியின் மூலமாக புதுதில்லியின் எய்ம்ஸ்-சில் உள்ள சிறப்பு பிரிவு மருத்துவர்கள் மாநில மருத்துவமனைகளில் ஐசியூ பிரிவை கண்காணிக்கும் மருத்துவர்களுக்கு வழிகாட்டுதலைத் தருவதோடு, தங்களின் மருத்துவ அறிவைப் பகிர்ந்து கொண்டும் வருகின்றனர். இந்த முயற்சியானது தொற்றுள்ளவர்களிடையே இறப்பு ஏற்படும் விகிதத்தை குறைக்கும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்தகைய முயற்சிகளோடு இணைந்திருக்கின்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆஷா பணியாளர்களின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.  தொற்றுள்ளோரைக் கண்டறியும் குழுக்களில் பங்கேற்று இந்த ஆஷா பணியாளர்கள், கண்காணிப்பு மற்றும் தொடர்புள்ளவர்களை தடம் அறியும் பணிக்கு வலு சேர்த்ததோடு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளைக் கண்காணிக்கவும் செய்கின்றனர்.  ஆபத்து நிலையில் இருக்கின்ற நோயாளிகள் சிகிச்சைக்கு சரியான நேரத்தில் மருத்துவமனையைச் சென்று அடைவதற்கு இவர்கள் முக்கியப் பங்கினை ஆற்றுகின்றனர். மேலும் கோவிட்-19 முன்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கும் இவர்கள் உதவி வருகின்றனர்.  சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் தேவைப்படுபவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

                                              ------



(Release ID: 1646939) Visitor Counter : 178