சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் இதுவரை இல்லாது ஒரே நாளில் 57,584 பேர் குணமடைந்துள்ளனர்

குணமடைந்தவர்கள் விகிதம் 72 சதத்தை கடந்துள்ளது
குணமடைவோர் விகிதம் விரைவில் இருபது லட்சத்தைக் கடக்கும்

Posted On: 17 AUG 2020 1:46PM by PIB Chennai

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  அதிகரித்துக் கொண்டே போகிறது. இன்று ஒரே நாளில் அதிக அளவிலான நோயாளிகள் குணமடைந்துள்ளனர், கொவிட்-19 தொற்று பாதித்த 57,584 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  72 சதத்தை தாண்டியுள்ளது. ஒருங்கிணைந்த கவனிப்பு முறையின் அடிப்படையில்,  பரவலைத் தடுக்கும் சிறப்பான உத்தி, தீவிரமான மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் விளைவாக குணமடைவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொவிட்-19 தீவிரத்தின் அடிப்படையில் தொற்று பாதித்தவர்களை வகைப்படுத்தி, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின், மருத்துவப் பராமரிப்பு நெறிமுறையை இந்தியா பின்பற்றியுள்ளது.  இந்த தரமான மருத்துவ பராமரிப்பு உத்திகளால் குணமடைந்தவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.

தீவிர பரிசோதனைகள், தனிமைப்படுத்துதல் மற்றும் தரமான மருத்துவச் சிகிச்சைகள் ஆகியவற்றால்  குணமடைபவர்களின் எண்ணிக்கை இருபது லட்சத்தை நெருங்கியுள்ளது (19,19,842).     மருத்துவக் கண்காணிப்பில் உள்ளவர்களைவிட தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இன்று இது 12,42,942 ஆக உள்ளது.

மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை 6,76,900 மட்டுமே. இது, கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 25.57 விழுக்காடுதான். தீவிர பரிசோதனைகளால் எளிதில் நோய் கண்டறிந்து, தனிமைப்படுத்துதல் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளித்தல் போன்ற சிறந்த நெறிமுறைகளால் இந்த நிலையை அடைந்துள்ளது.  இதானல் உயிரிழப்பு 1.92 விழுக்காடாக குறைந்துள்ளது.

****


(Release ID: 1646464) Visitor Counter : 200