சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியா மூன்று கோடி பரிசோதனைகளை செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளது

பத்து லட்சம் பேருக்கான பரிசோதனைகள் எண்ணிக்கை இன்று 21,769ஆக அதிகரித்துள்ளது

Posted On: 17 AUG 2020 2:46PM by PIB Chennai

மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஒருங்கிணைந்து  கவனத்துடன் செயல்பட்டதால் மூன்று கோடி பரிசோதனைகள் என்ற புதிய சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்தியாவில் மருத்துவப் பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், கொவிட்-19  பரிசோதனைகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில்  இந்தியா 7,31,697 பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது, நாள் ஒன்றுக்கு பத்து லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ளும் இலக்குடன் இந்தியா முனைப்புடன் செயல்படுகிறது.  இதனை அடிப்படையாகக் கொண்டு பத்து லட்சம் மக்கள் தொகைக்கான பரிசோதனைகளின் எண்ணிக்கை 21,769ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது

2020, ஜூலை 14 அன்று 1.2 கோடியாக இருந்து பரிசோதனைகளின் எண்ணிக்கை 2020 ஆகஸ்ட் 16 அன்று மூன்று கோடியாக அதிகரித்த அதே நேரத்தில், நோய்த் தொற்று பாதித்தவர்கள் விகிதம் 7.5 சதவீதத்திலிருந்து 8.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் மருத்துவப் பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், கொவிட்-19  பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அரசு ஆய்வகங்கள் 969,  தனியார் ஆய்வகங்கள் 501 என மொத்த ஆய்வகங்களின் எண்ணிக்கை 1470 ஆக உயர்ந்துள்ளது. இதன் விவரங்கள்:

  • ரியல்-டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான சோதனைக்கூடங்கள்: 754 (அரசு: 450 + தனியார்: 304)
  • ட்ரூநேட் அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்: 599 (அரசு: 485 + தனியார்: 114)
  • சிபிஎன்ஏஏடி அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்: 117 (அரசு: 34 + தனியார்: 83)

கோவிட்-19 குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களையும், கோவிட்-19 தொடர்பான  தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்கள்வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள தயவுசெய்து இந்த இணையதளத்தைப் பாருங்கள்: https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA

 

 

****


(Release ID: 1646463) Visitor Counter : 218