சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஒரே நாளில் இந்தியா 8.3 லட்சத்துக்கும் அதிகமான சோதனைகளைப் பதிவு செய்துள்ளது
இன்றைய நிலவரப்படி 2.68 கோடிக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன
Posted On:
13 AUG 2020 6:13PM by PIB Chennai
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட 8,30,391 சோதனைகள் மூலம், ஒரே நாளில் 8 லட்சம் என்ற மைல்கல்லைத் தாண்டி, புதிய சாதனையை இந்தியா பதிவு செய்துள்ளது. “பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை” என்கிற திட்டத்தைப் பின்பற்றி, ஒரு நாளைக்கு 10 லட்சம் சோதனைகள் செய்யும் திறனை எட்டுவதற்கு இந்தியா தயாராக உள்ளது.
கோவிட் – 19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்கான முதல் முக்கியமான படியாக விரைவு சோதனையைப் பின்பற்றுவதற்கு, மத்திய மற்றும் மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்களின் வலுவான தீர்மானமும் உறுதியும், இந்தியா ஒரு நாளைக்கு மேற்கொள்ளப்படும் சோதனைகளின் எண்ணிக்கையை விரைவாக அதிகரித்துள்ளது. வாரா வாரம் சராசரியாக தினசரி சோதனைகள் 2020 ஜூலை முதல் வாரத்தில் சுமார் 2.3 லட்சத்திலிருந்து தற்போதைய வாரத்தில் 6.3 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 8 லட்சத்துக்கும் அதிகமான சோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய நிலவரப்படி ஒட்டுமொத்த சோதனை 2,68,45,688 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு மில்லியனுக்கான டெஸ்ட் 19453 ஆக அதிகரித்துள்ளது.
இந்த மைல்கல்லின் வலுவான நிர்ணயத்திற்கான காரணம், நாடு முழுவதும் சோதனை ஆய்வகங்களின் தொடர்ச்சியான விரிவாக்கம் ஆகும். 2020 ஜனவரியில் ஒரு ஆய்வகத்திலிருந்து, நாடு இன்று 1433 ஆய்வகங்களால் வளப்படுத்தப்பட்டுள்ளது, அரசாங்கத் துறையில் 947 மற்றும் 486 தனியார் ஆய்வகங்கள் ஆகும். இது மத்திய மற்றும் மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும்.
பல்வேறு வகையான ஆய்வகங்கள் பின்வருமாறு:
- Real-Time RT PCR அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள்: 733 (அரசு: 434 + தனியார்: 299)
- TrueNat அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 583 (அரசு: 480 + தனியார்: 103)
- CBNAAT அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 117 (அரசு: 33 + தனியார்: 84)
***********
(Release ID: 1645692)
Visitor Counter : 210