பிரதமர் அலுவலகம்

கோழிக்கோடில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 07 AUG 2020 10:39PM by PIB Chennai

கோழிக்கோடில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், “கோழிக்கோடு பகுதியில் ஏற்பட்ட விமான விபத்தால் வேதனை அடைந்தேன். தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் குறித்தே நான் சிந்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடையட்டும். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களைத் தொடர்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்தேன். விபத்து நடந்த இடத்திற்கு, அதிகார வட்டாரங்கள் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்,” என்று தெரிவித்துள்ளார்.

***


(रिलीज़ आईडी: 1644644) आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam