எரிசக்தி அமைச்சகம்
நடப்பு நிதியாண்டில் என்டிபிசி குழுமம் மொத்தமாக 100-க்கும் மேல் பில்லியன் யூனிட்டுகளை உற்பத்தி செய்து சாதனை.
प्रविष्टि तिथि:
08 AUG 2020 1:09PM by PIB Chennai
தேசிய அனல் மின் கழகம் லிமிடெட் (National Thermal Power Corporation Limited – NTPC) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, என்டிபிசி நிறுவனம் நடப்பு நிதியாண்டில், மொத்தமாக 100 பில்லியன் யூனிட்டுகளை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் கிளைகள் சிறப்பாகச் செயல்படுவது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது.
மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவிலேயே, சத்தீஷ்கரில் உள்ள என்டிபிசி கொர்பா ( 2600 மெகாவாட்) , 2020 ஏப்ரல் முதல் ஜூலை வரை , 97.42 % பிளாண்ட் லோட் பேக்டர் உடன், சிறப்பாக செயல்பட்ட அனல் மின் நிலையமாக உருவெடுத்துள்ளது.
இது போல என்டிபிசியின் மேலும் ஐந்து மின்நிலையங்களும் சிறப்பாக செயல்பட்டவையாக பதிவு செய்துள்ளது. சத்தீஷ்கரில் உள்ள என்டிபிசி சிபெட் ( 2980 மெகாவாட்) , உ.பி.யில் உள்ள என்டிபிசி ரிகாண்ட் (3000 மெகாவாட்) என்டிபிசி விந்தியாச்சல் ( 4760 மெகாவாட்), ஒடிசாவில் உள்ள என்டிபிசி தல்சார் கனிகா (3000 மெகாவாட்), என்டிபிசி தல்சார் தெர்மல் ( 460 மெகாவாட்) ஆகியவை பிஎல்எப் திறன் மேம்பாட்டு அடிப்படையில், சிறப்பாக செயல்பட்ட 10 அனல் மின்நிலையங்களில் அடங்கும்.
2020 ஏப்ரல் முதல் ஜூலை வரை, மேலும் இரண்டு 200 மெகாவாட் அலகுகளான உ.பி. என்டிபிசி சிங்ராவ்லி 4 மற்றும் 1 அலகுகள், முறையே 1984 ஜனவரி மற்றும் 1982 ஜூன் மாதத்தில் நிறுவப்பட்டன. இவை பிஎல்எப் திறன் அடிப்படையில் முறையே, 99.90%, 99.87% சாதனையை எட்டியுள்ளன. இந்த சாதனைகள், என்டிபிசி அலகுகளின் சிறப்பான செயல்பாடு, உற்பத்தித் திறனைப் பறைசாட்டுகின்றன.
62.9 ஜிகாவாட் நிறுவு திறன் கொண்ட என்டிபிசி குழுமத்தில் 70 மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில், 24 நிலக்கரி, 7 கேஸ், திரவம் நேர்ந்த சுழலி, ஒரு புனல், 13 புதுப்பிக்கத்தக்க எரிபொருள் ஆகியவற்றுடன், 25 துணை மற்றும் கூட்டு முயற்சி மின்சார நிலையங்கள் உள்ளன. 5 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சார திட்டங்கள் உள்பட 20 ஜிகாவாட் திறன் கொண்ட குழுமத்தின் மேலும் சில நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
(रिलीज़ आईडी: 1644390)
आगंतुक पटल : 220