பிரதமர் அலுவலகம்

‘தேசிய கல்விக் கொள்கையின் கீழ், உயர்கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள் பற்றிய மாநாட்டில்’ பிரதமர் நாளை துவக்க உரையாற்றுகிறார்

Posted On: 06 AUG 2020 1:30PM by PIB Chennai

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள் பற்றிய மாநாட்டில் பிரதமர் நாளை (7 ஆகஸ்ட் 2020 அன்று) காணொளி மாநாடு மூலமாக துவக்க உரையாற்றுகிறார். மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக் குழுவும் இணைந்து இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன. தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இடம்பெற்றுள்ள முழுமையான, பல துறைகள் கொண்ட, வருங்காலத்தை எதிர் நோக்கக் கூடிய கல்வி; தரமான ஆய்வு; கல்வியில் மேலும் சிறந்த இடத்தை அடைவதற்காக தொழில்நுட்பத்தையும் கல்வியில் சேர்த்தல்; போன்ற பல்வேறு முக்கியமான அம்சங்கள் குறித்து, பல தொடர்கள் இந்த மாநாட்டில் இடம்பெறும்.

 

மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால், மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை இணைமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். தேசிய கல்விக் கொள்கையின் திட்ட வரைவுத் தயாரிப்புக் குழு உறுப்பினர்கள், தலைவர், சிறந்த கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்கள் குறித்து உரையாற்றுவார்கள்.

 

பல்கலைகழகத் துணைவேந்தர்கள், பல்வேறு கல்வி அமைப்புகளின் இயக்குர்கள், கல்லூரி முதல்வர்கள், இதர பங்குதாரர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள்.

இந்த நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பைக் காண்பதற்கான இணைப்புகள் பின்வருமாறு:

மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகத்தின் முகநூல் பக்கம் : https://www.facebook.com/HRDMinistry/

பல்கலைக்கழக மானியக் குழுவின் யூடியூப் சேனல் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் யூடியூப் சேனல்

பல்கலைக்கழக மானியக் குழுவின் ட்விட்டர் ஹாண்டில்(@ugc_india) : https://twitter.com/ugc_india?s=12

தூர்தர்ஷன் செய்தி தொலைக்காட்சியிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்.

 

*****



(Release ID: 1643782) Visitor Counter : 192