உள்துறை அமைச்சகம்

மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர் லோகமான்ய பாலகங்காதர திலகரின் 100-வது நினைவு தினத்தையொட்டி, ‘ லோகமான்ய திலகர்- சுயராஜ்யத்திலிருந்து தற்சார்பு இந்தியா’ என்பது குறித்த இரண்டு நாள் சர்வதேச இணைய கருத்தரங்கை மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தொடங்கி வைத்தார்

Posted On: 01 AUG 2020 6:16PM by PIB Chennai

பெரும் விடுதலைப் போராட்ட வீரர் லோகமான்ய பாலகங்காதர திலகரின் 100-வது நினைவு தினத்தையொட்டி, இந்திய கலாச்சார உறவு கவுன்சில் ஏற்பாடு செய்த  ‘ லோகமான்ய திலகர்- சுயராஜ்யத்திலிருந்து தற்சார்பு இந்தியா’ என்பது குறித்த இரண்டு நாள் சர்வதேச இணைய கருத்தரங்கை புதுதில்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தொடங்கி வைத்தார்

திரு.அமித் ஷா தமது உரையில், லோகமான்ய பாலகங்காதர திலகர், தமது சொல்லாலும், செயலாலும், இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்டார்.  திலகர் , விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணையற்ற பங்களிப்பை வழங்கியதாகக் கூறிய அவர், திலகர் தமது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நாட்டுக்காக அர்ப்பணித்தார் என்றார். புரட்சிகரமான சிந்தாந்த தலைமுறையை அவர் உருவாக்கியதாக அமைச்சர் குறிப்பிட்டார். ‘’ சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை நான் கொண்டிருப்பேன்’ என்ற லோகமான்ய திலகரின் தாரகமந்திரம், இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எப்போதும் பொறிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இந்த மந்திரம் நமது காலத்திலும் இயல்பாக பொருந்தி வருகிறது என்று திரு. அமித் ஷா குறிப்பிட்டார்.  ஆனால், 19-ம் நூற்றாண்டில், வெகு சிலரே இதை அடையும் துணிச்சலைக் கொண்டிருந்ததாகவும்,  இதனை நனவாக்க அவர்கள் தங்கள் உயிரையும் தியாகம் செய்ததாகவும் அவர் கூறினார்.  திலகரின் இந்த மந்திரம், இந்திய சமுதாயத்தைத் தட்டி எழுப்பி, விடுதலைப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற உதவியது என்றும், அதனால்தான் அவர் லோகமான்ய திலகர் என்று போற்றப்பட்டார் என்றும் அவர் கூறினார். லோகமான்ய திலகருக்கு முன்பு , மக்கள் கீதையில் துறவு பற்றி மட்டும் அறிந்திருந்தாகவும்,  சிறையில் திலகர் எழுதிய ‘கீதையின் ரகசியங்கள்’ என்ற நூலும், மக்கள் முன்பு கீதையின் கர்மயோகத்தை கொண்டு வந்தார் என்றும் அவர் கூறினார்.  திலகரின் கீதை ரகசியங்கள் இன்னும் மக்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது என்றார் அவர்.

சிறந்த பேச்சாளர், சிந்தனையாளர், தத்துவ அறிஞர், புகழ்பெற்ற எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகத் திறைமையை கொண்டிருந்தாலும், திலகர் அடிப்படை தத்துவத்தை உணர்ந்தவர் என்று மத்திய உள்துறை அமைச்சர் புகழ்ந்துரைத்தார்.



(Release ID: 1643025) Visitor Counter : 307