சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவில், தொடர்ந்து இரண்டாவது நாளாக, நாளொன்றுக்குஐந்துலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது
Posted On:
28 JUL 2020 5:28PM by PIB Chennai
கடந்த இரு தினங்களாக ஒவ்வொரு நாளும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் 19 நோய் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை மேற்கொள்ளுதல்; நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல்; சிகிச்சை அளித்தல் ஆகிய உத்திகளின் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது.கோவிட்-19 நோய் உள்ளவர்களை முன்னதாகவே கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில/ யூனியன் பிரதேச அரசுகளும் இணைந்து மிகத்தீவிரமாக பரிசோதனை செய்ததே இதற்கான முதலாவது முக்கிய நடவடிக்கையாகும்.26 ஜூலை 2020 அன்று நாட்டில் மொத்தம் 5 லட்சத்து 15 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.27 ஜூலை 2020 அன்று மொத்தம் 5 லட்சத்து 28 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
பரிசோதனைக்கு படிப்படியாக கிடைத்த வரவேற்பு, பரிசோதனை முறையில் புதிய உத்திகள் மேற்கொள்ளப்பட வழிவகுத்தன. இதன் காரணமாக பரிசோதனைகளை விரிவுபடுத்த முடிந்தது. இது நாள் வரை 1.73 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.10 லட்சம் பேரில் எத்தனை பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்ற எண்ணிக்கை தற்போது 12562 ஆக அதிகரித்துள்ளது. நொய்டா, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் மிக உயரிய வகையிலான பரிசோதனை வசதிகளை, பிரதமர் மெய்நிகர் நிகழ்ச்சி மூலம் நேற்று துவக்கி வைத்ததையடுத்து, இந்தியாவின் பரிசோதனை செய்யும் திறன் மேலும் வலுவடைந்துள்ளது. நாட்டில் பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாட்டில் 1310 ஆய்வுக் கூடங்கள் உள்ளன.905 அரசு ஆய்வுக்கூடங்கள்.405 தனியார் ஆய்வுக்கூடங்கள்.
ரியல் டைம் ஆர் டி பி சி ஆர் அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் 668 (அரசு 407 தனியார் 261 )
ட்ரூ நாட் அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் 537 (அரசு 467 தனியார் 70)
சி பி என் ஏ ஏ டி அடிப்படையிலான ஆய்வுக்கூடங்கள் 105 (அரசு 31 தனியார் 74)
(Release ID: 1641887)
Visitor Counter : 250