பாதுகாப்பு அமைச்சகம்

ரபேல் விமானங்கள் புறப்பட்டன

प्रविष्टि तिथि: 27 JUL 2020 3:00PM by PIB Chennai

இந்திய விமானப்படையின் முதல் ஐந்து ரபேல் விமானங்கள் பிரான்சின் மெரிக்னாக் டஸ்ஸஸால்ட் விமான நிறுவனத்திடமிருந்து இன்று காலை பெறப்பட்டன. இந்த ஐந்து விமானங்களில், மூன்று ஒற்றை இருக்கை, இரண்டு இரட்டை இருக்கை கொண்டது.

இந்த விமானங்களை இரண்டு கட்டமாக கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதை இந்திய விமானப்படையின் விமானிகள் கொண்டுவருவார்கள். இதற்காக அவர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட விமானப் பயணத்தின்போது வானிலேயே எரிபொருள் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரெஞ்சு விமானப்படையின் டேங்கர் மூலம் விமானிகள் இதனை மேற்கொள்வர்.

இந்த விமானம் வானிலையைப் பொறுத்து, அம்பாலா விமானப்படை நிலையத்துக்கு ஜூலை 29-ஆம்தேதி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எண் 17 ஸ்குவாட்ரன் , ‘’கோல்டன் ஆரோவ்ஸ்’’ ரபேல் விமானத்திற்கான தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.

 

***


(रिलीज़ आईडी: 1641565) आगंतुक पटल : 294
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Odia , Malayalam