பாதுகாப்பு அமைச்சகம்

கார்கில் வெற்றி தினத்தின் 21 வது ஆண்டு நினைவு நாளில் தேசிய போர் நினைவிடத்தில் இறந்த போர் வீரர்களுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

Posted On: 26 JUL 2020 3:57PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், மாநில பாதுகாப்ப்பு அமைச்சர் திரு. ஸ்ரீபாத் நாயக், பாதுகாப்புப் படைத் தலைவர் மற்றும் ராணுவ விவகாரத் துறை செயலாளர் ஜெனரல் பிபின் ராவத், இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நாரவனே, கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் மற்றும் விமானப்படைத் தலைவர் ஏர் தலைமை மார்ஷல் ஆர்.கே.எஸ் படவுரியா ஆகியோர், ”ஆபரேசன் விஜய்”  என அழைக்கப்படும் இந்தியாவின் கார்கில் மோதல் வெற்றியின் 21 வது ஆண்டு நினைவு நாளில், தேசிய போர் நினைவு சின்னத்தில் போரில் உயிரிழந்த வீர்ர்களுக்கு இன்று மரியாதை செலுத்தினர். ஜூலை 26, 1999 அன்று கார்கிலில் இந்திய ஆயுதப்படைகளின் வெற்றி வலுவான அரசியல், இராணுவ மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளின் சரித்திர சான்றாகும். தேசம் இந்த நாளை பெருமையுடனும், மரியாதையுடனும் பெரும் உத்வேகத்துடன் கொண்டாடுகிறது.

 

பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், போர்  நினைவுச்சின்னத்தில் வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில் இன்று கார்கில் வெற்றி தினத்தில், தாய்நாட்டை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க உயிரைத் தியாகம் செய்த இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்களுக்கு எனது வணக்கத்தையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எழுதினார். வீழ்ந்த நம் ஹீரோக்களின் தைரியம், வீரம், கட்டுப்பாடு மற்றும் உறுதியை நாடு எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளும், மேலும் அவர்களின் உயர்ந்த தியாகத்திலிருந்து உத்வேகம் பெற்று முன்னேறும். கார்கில் வெற்றி தினம் ஒரு நாள் மட்டுமல்ல, இந்த நாட்டின் வீரர்களின் தைரியம் மற்றும் வல்லமை எப்போதும் கொண்டாடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்திய இராணுவத்தின் துணிச்சலான வீரர்கள், தீர்க்கமுடியாத முரண்பாடுகள், விரோதமான நிலப்பரப்பு, சீரற்ற வானிலை மற்றும் ஆதிக்க உயரங்களை ஆக்கிரமித்துள்ள எதிரிகளை வென்று, விமான சேவையை வழங்கிய இந்திய விமானப்படையின் உதவியுடன் மோதலை வென்றனர். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில், பெருமைமிக்க தேசம் போரில் உயிர் நீத்த ஹீரோக்களின் நினைவாக இந்த வெற்றியை நாடு முழுவதும் எண்ணற்ற நிறமாலைகளை (myriad spectrum) உள்ளடக்கிய நிகழ்வுகளுடன் கொண்டாடுகிறது.

இந்த நிகழ்வில் பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர். அஜய்குமார் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

***


(Release ID: 1641394) Visitor Counter : 247