பிரதமர் அலுவலகம்

கோவிட்-19 தொற்றுக்கான உயர் உற்பத்திப் பரிசோதனை வசதிகளை ஜூலை 27-ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

Posted On: 26 JUL 2020 1:42PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஜூலை 27-ஆம் தேதி  காணொளிக் காட்சி மூலம் கோவிட்-19–க்கான உயர் உற்பத்திப் பரிசோதனை வசதிகளைத் தொடங்கி வைக்கிறார். இந்த வசதிகள் நாட்டின் பரிசோதனைத் திறனை அதிகரிப்பதுடன், நோயை ஆரம்பத்திலேயே  கண்டறிந்து, சிகிச்சை பெற உதவும். இதன் மூலம் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

ஐசிஎம்ஆர்- தேசியப் புற்றுநோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நொய்டா, ஐசிஎம்ஆர்- தேசிய இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மும்பை, ஐசிஎம்ஆர் - தேசிய காலரா மற்றும் நுரையீரல் நோய்கள் நிறுவனம், கொல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் இந்த உயர் உற்பத்தி  பரிசோதனை வசதிகள் அமைக்கப்படும். இதன் மூலம் நாளொன்றுக்கு 10,000 மாதிரிகளைச் சோதிக்க முடியும். இந்த சோதனைக் கூடங்கள், சோதனை நேரத்தைக் குறைப்பதுடன்மருத்துவப் பொருள்கள் மூலம் ஆய்வகப் பணியாளர்களுக்குத் தொற்று பரவுவதையும் குறைக்கும். இந்தப் பரிசோதனைக் கூடங்கள், கோவிட் நோயை மட்டுமல்லாமல், இதர நோய்களையும் பரிசோதிக்கும் திறன் கொண்டவையாகும்தொற்றுக் காலத்திற்குப் பின்னர், ஹெபடிடிஸ் பி மற்றும் சி, எச்ஐவி , மைக்கோ பாக்டீரியம் காசநோய், சைட்டோ மெகலோ வைரஸ், கிளாமைடியா, நெய்சீரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கான சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும்.

மகாராஷ்டிரா, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களுடன், மத்திய  சுகாதாரம் மற்றும் குடும்பநலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்.

***



(Release ID: 1641355) Visitor Counter : 229