வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தடையற்ற வர்த்தக உடன்படிக்கை, படிப்படியாக அதன் பலன்களை விரைந்து பெறுவதை நோக்கிய அர்ப்பணிப்பு நடவடிக்கையைப் பகிர்ந்து கொள்ள இந்தியா- இங்கிலாந்து உறுதி
Posted On:
25 JUL 2020 9:54AM by PIB Chennai
இந்தியா –இங்கிலாந்து இடையிலான 14-வது கூட்டுப் பொருளாதார, வர்த்தகக் குழு கூட்டம் ஜூலை 24-ஆம் தேதி மெய்நிகர் வடிவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், இங்கிலாந்து சர்வதேச வர்த்தக அமைச்சர் திருமிகு. எலிசபெத் டிரஸ் ஆகியோர் கூட்டாகத் தலைமை வகித்தனர். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி, இங்கிலாந்து சர்வதேச வர்த்தக இணையமைச்சர் திரு. ரணில் ஜெயவர்தனா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர்களுக்குத் துணை புரிந்தனர்.
தடையற்ற வர்த்தக உடன்படிக்கை, படிப்படியாக அதன் பலன்களை விரைந்து பெறுவதை நோக்கிய அர்ப்பணிப்பு நடவடிக்கையைப் பகிர்ந்து கொள்ள திரு. கோயல், திருமிகு.டிரஸ் ஆகியோர் இசைவு தெரிவித்தனர். பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்த இணையமைச்சர்கள் பூரி, ஜெயவர்த்தனா ஆகியோர் மாதாந்திர அடிப்படையில் கூட்டங்களை நடத்துவார்கள். பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல 2020 இலையுதிர் காலத்தில் புதுதில்லியில் திரு. கோயல் மற்றும் டிரஸ் இடையே கூட்டம் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. வாழ்க்கை அறிவியல், சுகாதாரம், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், உணவு, பானம் குறித்த இணை தலைவர்கள் தலைமையிலான கூட்டுப் பணிக்குழுக்கள், கடந்த கூட்டுப் பொருளாதார, வர்த்தகக்குழுக் கூட்டத்தின் போது அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகளின் படி அமைக்கப்பட்டது.
முறையான பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி, இங்கிலாந்து சர்வதேச வர்த்தக இணையமைச்சர் திரு. ரணில் ஜெயவர்த்தனா, அந்நாட்டின் முதலீட்டுத் துறை இணையமைச்சர் திரு. கெர்ரி கிரிம்ஸ்டோன் ஆகியோர் தலைமையில் நடந்த முழுமையான அமர்வில், சிஐஐ தலைமை இயக்குநர் திரு. சந்திரஜித் பானர்ஜி, இந்தியா-இங்கிலாந்து தலைமை செயல்அதிகாரிகள் அமைப்பின் இணைத் தலைவர் திரு. அலய் பிரமல் உள்ளிட்ட தொழில் நிறுவன தலைவர்களுடன் கலந்துரையாடினர்.
இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் நீண்டகாலமாக நிலவி வரும் வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளைப் புதுப்பிக்கவும், புத்துயிரூட்டவும், இருதரப்பும் பேச்சுவார்த்தையை திறந்த மனதுடன் அணுகின. இரு தரப்பும், சுகாதாரத் துறையில், குறிப்பாக தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ளன.
********************
(Release ID: 1641264)
Visitor Counter : 258