ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

உர உற்பத்திப் பிரிவில் வர்த்தகத்தை எளிதாக மேற்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது.

Posted On: 25 JUL 2020 1:54PM by PIB Chennai

உர உற்பத்திப் பிரிவில் வர்த்தகத்தை எளிதாக மேற்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது என்று மத்திய வேதிப்பொருள்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு டி.வி.சதானந்தா கௌடா தெரிவித்தார். உண்மையான அர்த்தத்தில் சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்கும் விவசாய சமூகத்திற்கு மேலும் சிறப்பாகச் சேவை ஆற்றவும் இந்த முயற்சிகள் உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த திசையில் அரசு எடுத்துள்ள பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்த திரு. கௌடா உரங்கள் துறை ஜுலை 2019இல் தற்போதுள்ள நேரடிப் பணப்பயன் பரிமாற்ற அமைப்பை பயனாளிகள் மேலும் எளிதில் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு மிகவும் ஏற்ற முறையிலான டி.பி.டி 2.0 (DBT 2.0) பதிப்பை அறிமுகப்படுத்தியதுடி.பி.டி 2.0 (DBT 2.0 ) பதிப்பில் டி.பி.டி டேஷ்போர்ட், பிஓஎஸ் 3.0 மென்பொருள் மற்றும் டெஸ்க்டாப் பி..எஸ் பதிப்பு என 3 கூறுகள் உள்ளன.   

பல்வேறு உரங்களின் விநியோகம் / விற்பனைக்கு கிடைத்தல் / தேவை ஆகியவற்றை குறித்த நிகழ்நேரத் துல்லியமான தகவலை டி.பி.டி டேஷ்போர்டுகள் வழங்குகின்றனஇதனை பொதுமக்கள் https://urvarak.nic.in என்ற இணையதளத்தைப் பார்த்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பி..எஸ் 3.0 (PoS 3.0) மென்பொருள் பல்வேறு வகையான நுகர்வோர்களுக்கு உரங்கள் விற்கப்படுவதை பதிவுசெய்து பல மொழிகளில் விற்பனை ரசீதுகளை உருவாக்குகிறதுமேலும் உரங்களை சமநிலையில் பயன்படுத்துவதை மேம்படுத்தும் வகையில் மண்வளப் பரிந்துரைகளை இது விவசாயிகளுக்கு வழங்குகிறது. மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான விற்பனை முனையக் கருவிகளுக்கு மாற்றாக அல்லது அவற்றோடு சேர்க்கப்பட்ட கூடுதல் வசதியாக டெஸ்க்டாப் பி..எஸ் பதிப்பு உள்ளது

உரங்களுக்கான டி.பி.டி 25-9-2019இல் அரசாள்கைக்கான ஸ்கோட்ச் தங்க விருது  மற்றும் 6-11-2019இல் அரசாள்கை இப்போதுஎன்ற டிஜிட்டல் உருமாற்ற விருது என 2 விருதுளைப் பெற்றுள்ளது

http://pibcms.nic.in/WriteReadData/userfiles/image/image001C6X7.jpg

  நாட்டில் உரங்களுக்கான விநியோக வலைப்பின்னலை எளிமைப்படுத்துவதற்காக அரசு எடுத்துள்ள முயற்சிகளைச் சுட்டிக்காட்டிய திரு கௌடா சரக்கைக் கையாள்வதற்கான கூடுதல் பயண முறையாக கடலோர நகரங்களுக்கு இடையிலான சரக்குக் கப்பல் பயணம் சேர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்மானிய விலையிலான உரங்களை கடலோர நகரங்களுக்கு இடையிலான கப்பல் பயணம் அல்லது / மற்றும் உள்நாட்டு நீர்வழிப்பயணம் வழியாக விநியோகிப்பதில் சரக்கு மானியத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும் கொள்கை 17-6-2019 மற்றும் 18-9-2019இல் அறிவிக்கப்பட்டது.  2019 – 2020ஆம் ஆண்டுக் காலத்தில் 1.14 எல்.எம்.டி உரங்கள் கடலோர நகரங்களுக்கு இடையில் சரக்குக் கப்பல் மூலம் கையாளப்பட்டுள்ளது

http://pibcms.nic.in/WriteReadData/userfiles/image/image002L3YL.jpg

யூரியா உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கான செலவு நிர்ணய விதிகளை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர் சிசிஇஏ-வின் அனுமதியோடு தனது துறை திருத்தி அமைக்கப்பட்ட என்.பி.எஸ் – IIIஇல் உள்ள குழப்பங்களை நீக்குவதற்கான அறிவிக்கையை 30 மார்ச் 2020இல் வெளியிட்டது என்று குறிப்பிட்டார்.  இந்த அறிவிக்கை திருத்தி அமைக்கப்பட்ட என்.பி.எஸ்– IIIஐ சிக்கல் இல்லாமல் நடைமுறைப்படுத்த உதவும்.  இதனால் உரங்கள் தயாரிக்கும் 30 தொழிற்சாலைகளுக்கு ரூ.350/மெட்ரிக் டன் என்ற அளவில் கூடுதல் நிர்ணயச் செலவை மானியமாக அளிக்க முடியும்.  மேலும் 30 ஆண்டுகளுக்கும் மேல் பழமையாக உள்ள மற்றும் கேஸ் தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ள யூரியா உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு ரூ.150/மெட்ரிக் டன் என்ற அளவில் சிறப்பு நிவாரண மானியம் அளிக்கவும் உதவும்.  தொடர்ச்சியான உற்பத்தியைத் தரும் வகையில் இந்தத் தொழிற்சாலைகள் செயல்படுவதற்கு இந்த மானிய உதவி வழி வகுக்கும்.  யூரியா தொழிற்சாலைகள் தொடர்ச்சியாக இயங்குவதற்கு உதவி புரிவதால் அவற்றால் தொடர்ச்சியாகவும் சீராகவும் விவசாயிகளுக்கு யூரியாவை விநியோகிக்க முடியும்.



(Release ID: 1641181) Visitor Counter : 216