அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மைலேப்பின் (Mylab) பரிசோதனைக் கருவிகளின் உற்பத்தி அளவு அதிகரிப்பதை உயிரியல் தொழில்நுட்பத் துறை ஆதரிக்கிறது.
Posted On:
25 JUL 2020 12:00PM by PIB Chennai
புனேவை தளமாகக் கொண்ட மைலேப் (Mylab) டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் அதன் கோவிட்-19 நோய்க்குறியியல் கருவியின் உற்பத்தி மற்றும் வளர்ச்சியை, தேசிய உயிரியல் துறையின் பயோஃபார்மா மிஷன் (DBT) உயிரியல் தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலின் (BIRAC) நிதியுதவி கொண்டு மேம்படுத்துகிறது.
மைலேப் (Mylab) டிஸ்கவரி சொல்யூஷன்ஸின் MD., ஹஸ்முக்ராவல் கூறுகையில், “யாரும் எங்களை நம்பாத போது எங்களுக்கு பக்க பலம் அளித்த உயிரியல் தொழில் ஆராய்ச்சி உதவிக் கவுன்சிலுக்கு நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். இந்த நிதியைக் கொண்டு எங்களது உற்பத்தி செயல்முறையை விரைவுபடுத்த முடியும்”
உயிரியல் தொழில்நுட்பத் துறையின் (DBT) இன் செயலாளரும், உயிரியல் தொழில் நுட்பத் துறையின் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சிலின் (BIRAC) தலைவருமான டாக்டர் ரேணுஸ்வரூப் கூறுகையில், “தற்போதைய தொற்றுநோய்க்கு எதிரான எங்கள் போராட்டத்தில், தரமான உள்நாட்டுப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட RT-PCR பரிசோதனைக் கருவிகளை நாடு முழுவதும் வழங்கியது, சோதனைத் திறனை மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான தேவையாக அடையாளம் காணப்பட்டது. ஆகவே, மைலேப் (Mylab) நோய்க்குறியியல் உற்பத்தியை அளவிடுவது DBT அந்த திசையில் பயணிக்க மிக விரைவாக எடுத்த ஒரு நடவடிக்கையாகும். மைலேப் (Mylab) உள்ள இந்த உற்பத்தித் திறன் விரைவான, உயர் செயல்திறன் கண்டறிதல் தளத்தை உருவாக்குகிறது, மேலும் சுயசார்பு இந்தியாவைப் பற்றிய நமது மாண்புமிகு பிரதமரின் பார்வையுடன் இணைக்கப்பட்டுள்ளது.”
தற்போது, மைலாப் 2,00,000 RT-PCR மற்றும் 50,000 RNA சோதனைகளின் உற்பத்தித் திறன் கொண்டது. NAT, HIV, HBV, HCV, மற்றும் புதிய கொரோனா வைரஸ் 2019-n COV / SARS-COV-2 ஆகியவற்றைக் கண்டுபிடிப்பதற்காக மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) / இந்தியா-உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (INDIA –FDA) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ICMR) ஒப்புதலை மைலேப் (Mylab) பெற்றுள்ளது.
இந்த நிறுவனம் சமீபத்தில் ஒரு மூலக்கூறு ஆய்வக இயந்திரமான காம்பாக்ட் XL ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இது பல்வேறு வினைப்பொருள்களை உற்பத்தி செய்வதுடன் ஒரே இயந்திரம் பல மூலக்கூறு சோதனைகளைச் செய்ய முடியும். கிராமப்புற இந்தியாவில் மூலக்கூறு கண்டறியும் ஆய்வகங்களை அமைப்பதற்கு இந்த இயந்திரம் இந்தியாவுக்கு உதவும், ஏனெனில் இது மிகப்பெரிய உள்கட்டமைப்புச் செலவுகள், மூலதனச் செலவுகள் மற்றும் இயக்கச் செலவுகளை நீக்குவதுடன் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டு அதிக எண்ணிக்கையிலான சோதனைகளைச் செய்ய முடியும்.
***********
(Release ID: 1641173)