இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

தற்சார்பு இந்தியா இயக்கத்தின் குறிக்கோள்களை எட்ட ஒரு கோடி இளம் தன்னார்வலர்களை திரட்டும் முடிவுக்கு வலு சேர்க்க யுனிசெப் நிறுவனத்துடன் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கூட்டு முயற்சி

Posted On: 20 JUL 2020 7:18PM by PIB Chennai

பிரதமரின் தற்சார்பு இந்தியா அழைப்புக்கு பங்களிக்கும் வகையில், நாட்டில் ஒரு கோடி இளம் தன்னார்வலர்களை திரட்டும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூவின் திட்டத்தை நிறைவேற்றும் வகையில், யுவாஹ் ( யுனிசெப் அமைப்பால் ஏற்படுத்தப்பட்ட பல்முனை தொடர்பாளர்கள் தளம்அமைப்புடன் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு  அமைச்சகம் உத்தேச அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளதுஇது இந்திய இளைஞர்களிடம் தன்னார்வத்தை ஊக்குவிப்பதுடன், கல்வி மற்றும் பயிற்சியில் இருந்து ஆக்கபூர்வ பணிக்கு செல்ல உதவி, அவர்களை திறன் மிக்க குடிமக்களாக உருவாக்க சேர்ந்து பணியாற்றவும் வகை செய்யும். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ முன்னிலையில், இந்த கூட்டாண்மையை இளைஞர் நல அமைச்சக செயலர் திருமதி. உஷா சர்மா, இந்தியாவில் யுனிசெப் பிரதிநிதி  டாக்டர் யாஸ்மின் அலி ஹேக் ஆகியோர்தொடங்கினர்.

இந்தக் கூட்டாண்மையின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றிய திரு. கிரண் ரிஜிஜூ, ‘’  இந்தச் சவாலான காலகட்டத்தில், இத்தகைய கூட்டாண்மை மிகவும் பொருத்தமானதாகும். நமது தற்போதைய கொள்கைகளுக்கு வலுவான கவனத்தை இது கொடுக்கும் என நான் நம்புகிறேன். இந்திய இளைஞர்களுக்கு தெளிவான வழிமுறையை பிரதமர் உருவாக்கியுள்ளார். இந்திய இளைஞர்களுக்குப் பலனளிக்கும் தற்சார்பு இந்தியா என்னும் உன்னதமான அழைப்பை அவர் விடுத்துள்ளார். இந்தியா  அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு வளரும் நாடாகும். எந்தத் துறையாக இருந்தாலும் இளைஞர்களின் பங்களிப்பு இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், உலக தளத்திலும் மிகப்பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தும் ‘’ என்று கூறினார்.

 மேலும் பேசிய திரு.கிரண் ரிஜிஜூ , “இளைஞர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைக் கவனிப்பதில் இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்தப் புதிய வழியிலான சிந்தனைகள், இந்தியாவில் நிலவும், எதிர்வரும் ஏராளமான சவால்களை எதிர்நோக்குவதற்கு நமக்கு தேவையானதாகும். இந்த முடிவை நோக்கியுவாஹ், அரசு எந்திரம் போன்ற கூட்டாளிகளுடன் இளைஞர்களை இணைக்கும் செயல்திறன் மிக்க பாலமாக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இருக்கும்’’ , என்று கூறினார்.

*****



(Release ID: 1640121) Visitor Counter : 184