நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

நுகர்வோர்பாதுகாப்புசட்டம், 2019 இன்றுமுதல்அமலுக்குவந்தது

Posted On: 20 JUL 2020 4:53PM by PIB Chennai

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் , 2019 இன்று முதல் அதாவது 2020 ஜூலை 20 முதல் அமலுக்கு வருகிறது. காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர்களிடம் உரையாற்றிய மத்திய நுகர்வோர்நலம், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் திருராம்விலாஸ் பாஸ்வான்இந்தப் புதிய சட்டம் நுகர்வோருக்கு அதிகாரம் அளிப்பதுடன், நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில்கள், நுகர்வோர் பிரச்சினைத் தீர்வுஆணையம், மத்தியஸ்தம், கலப்படம் மற்றும் போலிப்பொருள்கள் விற்பனை அல்லது உற்பத்திக்குத் தண்டனை போன்றவற்றின் மூலம் , அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கும் என்றார்.

நுகர்வோரின் உரிமைகளை அமல்படுத்துதல், பாதுகாத்தல், ஊக்குவித்தல்ஆகியவற்றுக்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தை  {சிசிபிஏ) உருவாக்க சட்டம் வகை செய்கிறது என்று அவர் கூறினார். நுகர்வோர் உரிமைகள் மீறல்களை விசாரித்தல், புகார்கள் ,வழக்குகளைப் பதிவுசெய்தல்பாதுகாப்பற்ற பொருள்கள் மற்றும் சேவைகளைத் திரும்பப் பெறுதல், நியாயமற்ற வணிகநடைமுறைகள், திசைதிருப்பும் விளம்பரங்களை ரத்து செய்தல்தவறான விளம்பரங்களைத் தயாரிப்போர்,  அனுமதி அளிப்போர், வெளியிடுவோருக்கு அபராதம் விதித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள சிசிபிஏ-வுக்கு அதிகாரம் வழங்கப்படும். -வணிகத்தளங்கள் விதிக்கும் நியாயமற்ற வணிக நடைமுறைகளுக்கான விதிமுறைகளும் இந்தச்சட்டத்தின் கீழ்வரும் என்று திரு. பாஸ்வான்கூறினார். மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்அமைத்தல், -வணிகத்தில் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுப்பதற்கான விதிமுறைகள் குறித்த அரசிதழ் அறிவிக்கை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாநில , மாவட்ட ஆணையங்கள் தங்கள் உத்தரவுகளை மறுஆய்வு செய்தல், நுகர்வோர் தங்கள் புகார்களை மின்னணு அடிப்படையில் தாக்கல் செய்யவும், நுகர்வோர் ஆணையங்களில் தங்கள் இருப்பிடம் அமைந்துள்ள பகுதிக்கு உட்பட்டு புகார்களைத் தாக்கல் செய்யவும் வகை செய்யும் நுகர்வோர் தாவா நீதிநடைமுறைகளை எளிதாக்க புதிய சட்டத்தில் இடமுள்ளதாக திரு. பாஸ்வான் தெரிவித்தார். மேலும், விசாரணையை காணொளிக் காட்சி மூலம் நடத்தவும், புகார்களை விசாரணைக்கு ஏற்பதற்கான குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படாவிட்டால், அவற்றை ஏற்க அனுமதிப்பது போன்றவற்றுக்கும் புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் தாவா தீர்வு ஆணையத்தின் விதிமுறைப்படி, ரூ.5 லட்சம் வரையிலான வழக்கு தாக்கல் செய்ய கட்டணம் ஏதுமில்லை என்று அவர் தெரிவித்தார். மின்னணு அடிப்படையில் புகார்களைத் தாக்கல் செய்ய வசதி உள்ளது. அடையாளம் தெரியாத நுகர்வோர் விஷயத்தில் நுகர்வோர் நலநிதியில் கடன்பெற முடியும். காலியிடங்கள், தீர்க்கப்பட்ட வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் பிற விஷயங்கள் பற்றி மாநில ஆணையங்கள் மத்திய அரசுக்கு காலாண்டுக்கு ஒருமுறை தகவல் அளிக்கும்.

பொதுவான விதிகள் தவிர, புதிய சட்டத்தின் கீழ், மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் விதிகள், நுகர்வோர் தாவா தீர்வு ஆணைய விதிகள், மாநில/மாவட்டஆணையஉறுப்பினர்கள், தலைவரை நியமிப்பதற்கான விதிகள், மத்தியஸ்த விதிகள், மாதிரி விதிகள், -வணிக விதிகள், நுகர்வோர் ஆணைய நடைமுறை ஒழங்குமுறை ,மத்தியஸ்த ஒழுங்குமுறை ஆகியவையும் உள்ளன. மாநில ஆணையம் மற்றும் மாவட்ட ஆணைய நிர்வாகக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையும் இதில் அடங்கும்.

மத்திய நுகர்வோர் நலம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரைத் தலைவராகவும், இணையமைச்சரை துணைத்தலைவராகவும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 34 உறுப்பினர்களையும் கொண்ட நுகர்வோர் பிரச்சினைகள் பற்றிய ஆலோசனை அமைப்பான மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சிலை அமைப்பதற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் விதிகளில் இடமுள்ளதாக திரு. பாஸ்வான்கூறினார்.

திரு. பாஸ்வான் தமது நிறைவுக் கருத்தாகமுந்தைய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986-இல் நீதி வழங்க ஒற்றை அம்ச அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டதாகவும், அதனால் காலவிரயம் ஆனதாகவும் தெரிவித்தார். பாரம்பரிய விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமல்லாமல், புதிய -வணிக சில்லரை விற்பனையாளர்கள்/தளங்களில் இருந்தும் வாங்குபவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க பல திருத்தங்கள் செய்த பின்னர் இந்தப் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். நாட்டில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க உபகரணமாக இந்தச் சட்டம் இருக்கும் என்று அவர் கூறினார்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-இன் முக்கிய அம்சங்கள் குறித்த விளக்கத்துக்கு இங்கே கிளிக் செய்யவும்.Click here for presentation on salient features of CPA 2019

****(Release ID: 1640019) Visitor Counter : 86