குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மக்களுடன் இணைந்து செயலாற்றுவதற்காக ஊடகங்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் பாராட்டு.

Posted On: 19 JUL 2020 10:34AM by PIB Chennai

இந்தியக் குடியரசு துணைத்தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான திரு. எம்.வெங்கய்யா நாயுடு கொரோனா வைரஸ் திடீர்ப் பரவல் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலின் பல்வேறு அம்சங்கள் குறித்து மக்களுக்குத் தேவையான தகவல், பகுப்பாய்வு மற்றும் சரியான கண்ணோட்டங்களை அளித்து அவர்களுக்கு அறிவுறுத்துவதற்காகவும் இந்த நோய்க்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் பதட்டமடைந்து இருக்கும் மக்களோடு இணைந்து செயலாற்றுவதற்காகவும் ஊடகங்களைப் பாராட்டினார்.

தனது முகநூலில் இன்று ஊடகம்: கொரோனா காலகட்டத்தில் நமது கூட்டாளிஎன்ற தலைப்பிலான பதிவில் திரு.நாயுடு வைரஸ் தொற்று பரவிய காலகட்டத்தில் இருந்து கடந்த சில மாதங்களாக ஊடகங்களின் பங்களிப்பை விரிவாக எடுத்துரைத்து ஊடகத்தையும், ஊடகவியலாளர்களையும் பாராட்டியுள்ளார். மேலும்தகவல் தெரிவித்தல், கல்வி புகட்டல், பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை மக்களுக்கு அளித்தல் ஆகிய தங்களது அடிப்படைச் செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதற்கும் நெருக்கடியான காலகட்டத்தில் நமது வாழ்க்கையில் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளாக இருப்பதற்கும்ஊடகத்திற்கு திரு. நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்மக்கள் துன்பத்திற்கு ஆளாகும் போது அவர்களின் துன்பத்திற்கான காரணம் மற்றும் விளைவுகள், இந்த நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் மற்றும் இதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் என்ன என்பது தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்ள முயல்வார்கள்மக்களுக்கு இத்தகைய தகவல்களைத் தந்து அவர்களுக்கு அறிவூட்டுவது ஊடகத்தின் பணியாக உள்ளது

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், அடிக்கடிக் கைகளைக் கழுவுதல், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், ஆன்மீக ஈடுபாடு முதலான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்வதற்கு ஊடகங்கள் எடுத்து வரும் சிறப்புத் தொடர்பியல் பிரச்சார முகாம்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகத்திற்கே இந்தச் சூழல் நெருக்கடியான காலகட்டமாக இருந்த போதிலும் அவை மக்களுக்குத் தகவல் தெரிவிக்கும் செயற்பாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஊக்கத்தை திரு நாயுடு பாராட்டினார்.  ”கட்டுப்பாடுகளின் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் விளம்பரம் மூலமான வருவாய் அவர்களுக்குக் குறைந்திருக்கிறது.  ஊடகங்களை நடத்துகின்ற செயல்நிலைமை சீரமைக்கப்பட வேண்டும், ஊடகத்தில் பணிபுரிவோரில் பெரும்பான்மையினர் ஊதியக் குறைப்பை எதிர்கொண்டாக வேண்டும்.  இருந்தாலும் இவற்றையும் தாண்டி ஊடகங்களின் சேவை மிக அத்தியாவசியமாகத் தேவைப்படும் இந்தச் சூழலில் மக்களுக்கு அறிவுறுத்தல் என்ற நோக்கத்தில் ஊடகங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன” என்று அவர் குறிப்பிட்டார். 

திரு நாயுடு அச்சு ஊடகம் குறித்து குறிப்பிடும் போது, ”அச்சு ஊடகங்களை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.  கொரோனா வைரஸ் மற்றும் பெருந்தொற்றுப் பரவலுக்கு ஒதுக்கப்படும் இடம் போர்க்காலச் செய்திகளுக்கு ஒதுக்கப்படும் இடத்தை விட அதிக அளவில் இருக்கிறது.  இத்தகையச் செய்திகளுக்கான இடங்கள் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டு வாசகர்களின் தகவல் தேவையை தொடர்ந்து பூர்த்தி செய்து வருகின்றன.  நோய் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்த பல்வேறு அம்சங்கள் மீதான விரிவான பகுப்பாய்வுகள் இன்னமும் ஒரு இயக்க மாதிரியில் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன”.

இருந்த போதிலும் சில தொலைக்காட்சிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் திரு. நாயுடு கூறியுள்ளார்.  இத்தகைய தொலைக்காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்.  அவை சூழலை மிகைப்படுத்துவதில் இருந்து விலகி இருக்கவேண்டும்.  அச்சத்தை உருவாக்குவது என்பது ஏற்கனவே பதட்டமான மனநிலையில் இருக்கின்ற மக்களை மேலும் சீர்குலைத்துவிடும்.  இணையப் பயனாளர்கள் (Netizens) வைரஸ், நோய், சிகிச்சை ஆகியவை குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு மட்டுமே சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தவறான திசைக்கு வழிகாட்டும் பொய்ச் செய்திகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஊடகம் தன்னார்வச் செயல்பாட்டுடனும் போர்க்கால அடிப்படையிலும் பணியாற்றாவிட்டால் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிடம் ஏற்பட்டு விடக்கூடும் என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார். ஊடகத்தின் நிரல்வரிசை நிர்ணயப் பங்கினைச் சுட்டிக்காட்டிய திரு.நாயுடு ”பெருந்தொற்றுப் பரவலின் பல்வேறு அம்சங்களை எடுத்துக்காட்டி அவற்றை தகவல் மற்றும் பகுப்பாய்வு முறையில் ஆவணப்படுத்துவதன் மூலம் ஊடகமானது நமது பாராளுமன்ற நிறுவனங்களில் பெருந்தொற்று நிர்வாகம் குறித்த விவாதங்களையும், கலந்துரையாடல்களையும் மேற்கொள்வதற்கான நிரல் வரிசையை நிர்ணயம் செய்கிறது.  சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எழுப்புவதற்கு ஊடக அறிக்கைகள் தான் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான முதன்மை ஆதாரங்களாக உள்ளன” என்றும் குறிப்பிட்டார். 

ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுள்ள சில விமர்சனங்களைச் சுட்டிக்காட்டிய மாநிலங்களவைத் தலைவர் திரு நாயுடு பெருந்தொற்றுப் பரவலைக் கையாள்வது குறித்த நாடாளுமன்றப் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்

உள்நாட்டு விமானப் பயணம் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், ரயில் பயணக்கட்டுப்பாடு ஓரளவிற்குத் தளர்த்தப்பட்டதாலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் துறை தொடர்பான நிலைக்குழுக்கள் இந்த மாதத்தில் தங்களது கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளன.  இந்த நிலைக்குழுக்கள் பெருந்தொற்றை நிர்வகிக்கும் பல்வேறு அம்சங்கள் குறித்தம் தொற்றுப்பரவல் குறைவது குறித்தும் ஆய்வினை மேற்கொண்டுள்ளன. உண்மையில் இதன் அர்த்தம் என்னவென்றால் பெருந்தொற்றைக் கையாள்வது குறித்து எடுக்கப்பட வேண்டிய நாடாளுமன்ற பரிசீலனை நாட்டின் உச்சநிலை மக்கள் பிரதிநிதிகள் அவையின் கடைசி அமர்வுக்குப் பிறகு சுமார் மூன்றரை மாதங்கள் கழித்து தொடங்கியுள்ளது  என்பது ஆகும்.  நாட்டில் தற்போது நிலவிவரும் இந்தச் சூழலில் இதற்கும் குறைந்த காலகட்டத்தில் செயல்படுவது என்பது சாத்தியமானது அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்துவதற்கு இரண்டு அவையின் தலைவர்களையும் அரசு அண்மையில் தொடர்பு கொண்டுள்ளதாக திரு நாயுடு மேலும் தெரிவித்தார்.

****



(Release ID: 1639752) Visitor Counter : 501