குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
கயிறு மற்றும் கயிறு பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா சாதனை
Posted On:
15 JUL 2020 3:25PM by PIB Chennai
2019-20-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து,தேங்காய் நார் மற்றும் கயிறு உற்பத்திப் பொருள்கள் ரூ.2757.90 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது முன் எப்போதும் இல்லாத அளவஈல் விடவும் அதிகமாகும். முந்தைய 2018-19-ஆம் ஆண்டைவிட சுமார் ரூ.30 கோடி அதிகமாகும். அந்த ஆண்டு ரூ.2728.04 கோடிக்கு ஏற்றுமதி ஆனது. 2019-20-இல் 9,88,996 மெட்ரிக் டன் கயிறு மற்றும் கயிறு உற்பத்தி பொருள்கள் ஏற்றுமதி ஆனது. இது 2018-19-இல் 964046 மெட்ரிக் டன்னாக இருந்தது. தேங்காய் நார் துகள்கள், முடிச்சுகளை உடைய பாய்கள், புவி நெய்தல் பொருள்கள், கயிறு விரிப்புகள், தரை விரிப்புகள்,இதர பொருள்கள், தேங்காய் நார்க்கயிறு, விசைத்தறிப் பாய்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அளவிலும், மதிப்பிலும் மிக அதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைத்தறிப் பாய்கள், கயிறு நூல், ரப்பர் கயிறு, விசைத்தறிப் பாய்கள் ஏற்றுமதி அளவில் குறைந்தாலும், மதிப்பில் அதிகரித்துள்ளது.
• நாட்டிலிருந்து மேற்கொள்ளப்படும் கயிறு பொருள்கள் ஏற்றுமதியில் தேங்காய் நார்த் துகள்கள் மூலம் ரூ.1349.63 கோடி வருவாய் கிட்டியுள்ளது. இது கயிறு பொருள்கள் ஏற்றுமதியில் 49 சதவீதம் ஆகும்.
• கயிற்று நார் ரூ.498.43 கோடிக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. இது மொத்த ஏற்றுமதியில் 18 சதவீதம் ஆகும்.
• மதிப்பு கூட்டு பொருள்களின் ஏற்றுமதி, மொத்த ஏற்றுமதியில் 33 சதவீதமாக உள்ளது.
• மதிப்பில் முடிச்சுகளுடனான பாய்கள் முன்னணி வகிக்கின்றன. ( மதிப்பில் 20%)
• இக்கால கட்டத்தில் கயிறு மற்றும் கயிற்றுப் பொருள்களின் ஏற்றுமதி ஒரு போதும் குறையவில்லை.எனவே கயிறு தொழில் முனைவோர் கவலை கொள்ளத் தேவையில்லை.
• இதே போல உள்ளூர்ச் சந்தையிலும் இந்தப் பொருள்கள் விற்பனை அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது.
• இந்தியாவின் பல்வேறு துறைமுகங்கள் மூலம் ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகிறது. 99 சதவீதம் கயிறு பொருள்கள் தூத்துக்குடி, கொச்சி மற்றும் சென்னைத் துறைமுகங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. விசாகபட்டினம், மும்பை,கொல்கத்தா ஆகிய பெரிய துறைமுகங்கள் மூலமும், குறைந்த அளவு ஏற்றுமதி கன்னூர், கோவை ஆகிய இடங்களில் இருந்து சாலை வழியாகவும் மேற்கொள்ளப்படுகிறது.
துறைமுகம் வாரியாக ஏற்றுமதி விவரங்கள் வருமாறு;
துறைமுகம் வாரியாக ஏற்றுமதி (2019-20)
|
|
|
வரிசை
எண்
|
துறைமுகம்/ ஏற்றுமதியாகும் இடம்
|
அளவு
(மெட்ரிக் டன்னில்)
|
மதிப்பு
(ரூ. லட்சத்தில்)
|
|
1
|
தூத்துக்குடி
|
519144
|
122910.39
|
|
2
|
கொச்சி
|
217930
|
107023.69
|
|
3
|
சென்னை
|
238970
|
43159.93
|
|
4
|
விசாகபட்டனம்
|
11578
|
1871.26
|
|
5
|
மும்பை
|
1145
|
596.15
|
|
6
|
கொல்கத்தா
|
113
|
131.89
|
|
7
|
பெங்களூரு
|
41
|
58.19
|
|
8
|
மற்றவை (சாலை வழியாக)
|
75
|
38.63
|
|
|
மொத்தம்
|
988996
|
275790.13
|
|
******
(Release ID: 1638970)
Visitor Counter : 260